உரோமைக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உரோமா
உரோமக் குடியரசு
[[உரோம முடியரசு|]] She-wolf suckles Romulus and Remus.jpg
 
[[எட்ருஸ்கிய நாகரிகம்|]] Haruspex.png
509 கிமு – 27 கிமு Vexilloid of the Roman Empire.svg [[உரோமைப் பேரரசு|]]

உரோமக் குடியரசு SPQR

SPQR

உரோமக் குடியரசு அமைவிடம்
சீசரின் படுகொலையின் போது உரோமக் குடியரசின் பரப்பு (கிமு 44)
தலைநகரம் ரோம்
மொழி(கள்) லத்தீன், கிரேக்கம்
மதம் உரோம பல்லிறைவாதம்
அரசு குடியரசு (சிலராட்சி)
கோன்சல்
 - 509–508 கிமு லூசியஸ் ஜூனியஸ் புரூட்டஸ், லூசியல் டார்க்கினியஸ் கொல்லாட்டினஸ்
 - 27 கிமு அகஸ்ட்டஸ்,
மார்க்கலஸ் அக்ரிப்பா
சட்டசபை உரோம சட்டமன்றங்கள்
பண்டைக்காலம் செவ்வியப் பழங்காலம்
 - லுக்ரேசியாவின் வன்புணர்ச்சி 509 கிமு
 - சீசர் நிரந்தர சர்வாதிகாரியாக அறிவிப்பு 44 கிமு
 - ஆக்டியம் சண்டை அக்டோபர் 2, 31 கிமு
 - ஆக்ட்டேவியன் அகஸ்ட்டஸ் என அறிவிப்பு 16 ஜனவரி, 27 கிமு
பரப்பளவு
 - 326 கிமு[1] 10,000 கிமீ² (3,861 சதுர மைல்)
 - 200 கிமு[1] 3,60,000 கிமீ² (1,38,997 சதுர மைல்)
 - 146 கிமு[1] 8,00,000 கிமீ² (3,08,882 சதுர மைல்)
 - 100 கிமு[1] 12,00,000 கிமீ² (4,63,323 சதுர மைல்)
 - 50 கிமு[1] 19,50,000 கிமீ² (7,52,899 சதுர மைல்)
நாணயம் உரோம நாணயமுறை
தற்போதைய நிலை

உரோமைக் குடியரசு உரோம நாகரீகம் குடியரசு அரசமைப்பாக இருந்த கால கட்டத்தைக் குறிக்கிறது. முடியரசாக இருந்த உரோம நகர் கிமு 508 இல் குடியரசானது. ஒவ்வொரு ஆண்டும் கோன்சல்கள் எனப்பட்டும் இரு அதிகாரிகள் செனேட் அவையினால் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசை நிருவகித்தனர். காலப்போக்கில் ஒரு விரிந்த அரசியலமைப்புச் சட்டமும் உருவானது. அதில் அரசின் ஒவ்வொரு பிரிவின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு அங்கமும் முழு அதிகாரத்தைக் கையிலெடுக்காவண்ணம் அதிகாரத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தேசிய நெருக்கடி காலங்களைத் தவிர அதிகாரிகளின் பதவிக் காலம் ஓராண்டாக குறுக்கப்பட்டிருந்தது. எந்த வொரு தனி மனிதனும் குடியரசு மீது சர்வாதிகாரம் செலுத்த முடியாதவாறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.

ஆனால் உரோமக் குடியரசு படையெடுப்புகளாலும் பிற நாட்டுக் கூட்டணிகளாலும் அளவில் பெருகியதால், குடியரசு நிருவாக முறை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போனது. அதிகாரம் ஒரு சில செல்வாக்கு வாய்ந்த செனேட்டர்கள் கையில் தங்கியதால், அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. உள்நாட்டுப் போர் மூழ்வது வழக்கமானது. கிமு ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாக பல உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன. அவற்றின் இறுதியில் வெற்றி பெற்ற ஆக்ட்டேவியன் அகஸ்ட்டஸ் என்ற பெயரில் பேரரசராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். குடியரசு கலைக்கப்பட்டு உரோமைப் பேரரசு உருவானது.

மேற்கோள்கள் [தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Taagepera, Rein (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D.". Social Science History (Social Science History, Vol. 3, No. 3/4) 3 (3/4): 125. doi:10.2307/1170959. 

"http://ta.wikipedia.org/w/index.php?title=உரோமைக்_குடியரசு&oldid=1385271" இருந்து மீள்விக்கப்பட்டது