ஜூன் 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சூன் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||
| MMXIII | ||||||
ஜூன் 19 கிரிகோரியன் ஆண்டின் 170ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 171ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 195 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1269 - பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் தண்டம்செலுட்த்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னன் கட்டளையிட்டான்.
- 1867 - மெக்சிகோவின் மன்னன் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.
- 1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அனைத்து தெற்கு மாநிலங்களும் ஐக்கிய அமெரிக்கா]வுடன் இணைக்கப்பட்ட பின்னர், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
- 1910 அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் நாள் கொண்டாடப்பட்டது.
- 1912 - ஐக்கிய அமெரிக்காவில் 8-மணி நேர வேலைத்திட்டம் அமுலாகியது.
- 1943 - டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பிலிப்பீன்ஸ் கடல் சமர் இடம்பெற்றது.
- 1953 - அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜூலியஸ் மற்றும் எத்தல் ரோசன்பேர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1961 - குவெய்த் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1987 - ஸ்பெயினில் கடைத்தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர்ர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள் [தொகு]
- 1623 - இலாய்சி பாஸ்கல், பிரெஞ்சு அறிவியலாளர் (இ. 1662)
- 1903 - வால்ரர் ஹமொண்ட், இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் (இ. 1965)
- 1947 - சல்மான் ருஷ்டி, இந்திய எழுத்தாளர்
- 1970 - ராகுல் காந்தி, இந்திய அரசியல்வாதி
- 1978 - டெர்க் நொவிட்ச்கி, ஜெர்மன் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1867 - முதலாம் மாக்சிமிலியன், மெக்சிக்கோ மன்னன் (பி. 1832)
- 1993 - வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1911)