சல்மான் ருஷ்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| சல்மான் ருஷ்டி | |
|---|---|
| பிறப்பு | அகமத் சல்மான் ருஷ்டி |
| தொழில் | எழுத்தாளர் |
| கருப்பொருட்கள் | Criticism, travel |
|
Influences
|
|
சர் அகமத் சல்மான் ருஷ்டி (Sir Ahmed Salman Rushdie, பி ஜூன் 19, 1947) ஒரு இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவரின் 1981இல் வெளிவந்த இரண்டாம் புதினம் "மிட்னைட்ஸ் சில்ட்ரென்" காரணமாக முதலாக புகழுக்கு வந்தார். இப்புதினம் புக்கர் பரிசு வென்றுள்ளது.
1988இல் இவரின் 4ஆம் புதினம், த சேட்டானிக் வர்சஸ், வெளிவந்தது. இப்புதினம் இஸ்லாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முஸ்லிம்கள் ருஷ்டியுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளனர். ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார். இதனால் ருஷ்டியை பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு செய்துள்ளது. 2008 வரை யாவரும் ருஷ்டியை காயப்படுத்தவில்லை, ஆனால் ஜப்பானில் இப்புதினத்தை மொழிபெயர்ப்பு செய்தவர் 1991இல் கொல்லப்பட்டார்.
2007இல் அட்லான்டா, ஜோர்ஜியாவின் எமரி பல்கலைக்கழகத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற பதவியில் ஏறினார். 2008இல் அமெரிக்க கலை மற்றும் கடிதம் அகாடெமியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.