மேலவை (ஐக்கிய அமெரிக்கா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்காவின் மேலவை அல்லது செனட் அவை (ஆங்கிலம்: United States Senate) அமெரிக்க சட்டமன்றத்தின் இரண்டு அவைகளின் மேலவையாகும். இந்த அவையின் மொத்த 100 உறுப்பினர்களில் ஐம்பது மாநிலங்களிலிருந்தும் இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு செனட்டர் ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் உள்ளார். 1/3 செனட்டர்களின் பதவிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக தேர்தல் நடக்கும்.
அரசியலமைப்பின் முதலாம் கட்டுரையின் படி கீழவையவிட மேலவையில் சில உரிமைகள் உள்ளன.