ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை
| பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தின் மக்கள் அவை |
|
|---|---|
| 55வது நாடாளுமன்றம் | |
| வகை | |
| வகை | கீழவை of ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் |
| தலைமை | |
| அவைத்தலைவர் | ஜான் பெர்கோ சூன் 22, 2009 முதல் |
| ஆளும் கட்சித் தலைவர் | ஆன்ட்ரூ லான்சிலெ, கன்சர்வேட்டிவ் செப்டம்பர் 4, 2012 முதல் |
| நிழல் தலைவர் | ஆஞ்செலா ஈகிள், தொழிற்கட்சி அக்டோபர் 7, 2011 முதல் |
| கட்டமைப்பு | |
| இருக்கைகள் | 650 |
| அரசியல் குழுக்கள் | மேன்மைதாங்கிய அரசியின் அரசு
அலுவல்முறை எதிர்க்கட்சி
மற்ற எதிர்கட்சிகள்
அவைத்தலைவர்
|
| காலப் பகுதி | 5 ஆண்டுகள் |
| Salary | ஆண்டுக்கு £65,738 |
| தேர்தல்கள் | |
| வாக்களிப்பு முறைகள் | முதலாவதாக வந்தவர் வெற்றி |
| கடைசித் தேர்தல் | மே 6, 2010 |
| அடுத்த தேர்தல் | மே 7, 2015 |
| Redistricting | Boundary Commissions |
| கூடுமிடம் | |
| மக்களவை கூடம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை வெஸ்ட்மின்ஸ்டர் நகரம் இலண்டன் ஐக்கிய இராச்சியம் |
|
| இணையத்தளம் | |
| காமன்சு அவை | |
மக்கள் அவை (House of Commons) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். மற்ற பிரபுக்கள் அவை போலவே இதுவும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் கூடுகிறது. காமன்சு அவை அல்லது அவுஸ் ஆப் காமன்சு எனப்படும் இந்த மக்களவை பொதுமக்களால் மக்களாட்சித் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 650 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவைத் தொகுதிகளின் சார்பாளர்களாக தேர்தல்களில் முதலில் வந்தவர் வெற்றி என்ற முறைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை பதவி வகிக்கின்றனர
1911இல் இயற்றப்பட்ட நாடாளுமன்ற சட்டத்தின்படி பிரபுக்கள் அவையினால் சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் நீக்கப்பட்டது; மேலவையால் சட்டமியற்றலை தாமதப்படுத்தவே இயலும். பிரதமரின் கீழியங்கும் மேன்மைதாங்கிய அரசியின் அரசு மக்களவைக்கே முதன்மையாக பொறுப்பானது. மக்களவையின் பெரும்பாலோனோரின் ஆதரவு உள்ளவரையிலேயே நாட்டின் பிரதமர் ஆட்சி செய்ய இயலும்.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் House of Commons of the United Kingdom தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- மக்களவையின் அலுவல்முறை வலைத்தளம்
- மக்களவை டெமாக்கிரசி லைவ் காட்சி பிபிசி செய்திகளில்