வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, லண்டன் - 2007

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (Palace of Westminster), அல்லது நாடாளுமன்ற அவைகள் (Houses of Parliament) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்- மக்களவை, குறுமன்னர்கள் அவை- அமர்கின்ற இடமாகும். தேம்சு ஆற்றின் வடகரையில் [note 1] வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் லண்டன் பரோவின் மையப் பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தின் அண்மையில் உள்ளது. அரசாங்கக் கட்டிடங்களான வைட் ஹால் மற்றும் டௌனிங் சாலை இதற்கு அண்மையிலேயே உள்ளன. இந்தப் பெயர் இரு கட்டிடங்களுக்கு பொதுவானதாக உள்ளது; பழைய அரண்மனை - 1834ஆம் ஆண்டில் எரிந்துபோன பழங்கால கட்டிடம், மற்றொன்று அதன் மாற்றாக தற்போதிருக்கும் புதிய அரண்மனை. இந்த அரண்மனை அரசாங்கச் சடங்குகளுக்கு அரசியின் வசிப்பிடமாக தனது தகுதியையும் கம்பீரத்தையும் தக்க வைத்துள்ளது.

மேற்கோள்கள் [தொகு]

  1. தேம்சு ஆறு பொதுவான தனது மேற்கு-கிழக்கு திசையில் இல்லாமல் இங்கு தெற்கிலிருந்து வடக்கே பாய்கிறது, எனவே அரண்மனை குறிப்பாக மேற்கு கரையில் அமைந்துள்ளது.

மேலும் அறிய [தொகு]

வெளியிணைப்புகள் [தொகு]