தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொழிற் கட்சி
Red on white word "Labour" in sans-serif font to the right of white on red silhouette of a rose.
தலைவர் எட் மிலிபாண்ட் MP
துணைத் தலைவர் ஹாரியேட் ஹர்மான் MP
தொடக்கம் 1900 (1900)
தலைமையகம் 39 விக்டோரியா சாலை, இலண்டன், SW1H 0HA,
இளைஞர் அணி இளைஞர் தொழிற்கட்சி
உறுப்பினர் (2010) 193,961
அதிகாரப் பட்ச அரசியல்
நிலைப்பாடு/
கொள்கை
சனநாயக சோசலிசம்[1][2][3]
சமூக மக்களாட்சி
மூன்றாம் வழி சமூக மக்களாட்சி
பன்னாட்டுக்கூட்டு பன்னாட்டு சோசலிசம்
ஐரோப்பிய நாடாளுமன்ற குழு சோசலிச மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணி
அதிகாரப் பட்ச நிறம் சிவப்பு
தளம் www.labour.org.uk

தொழிற் கட்சி (Labour Party) ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். பிரித்தானிய அரசியலில் நடு - இடது பார்வை கொண்ட சமூக மக்களாட்சி மற்றும் சனநாயக சோசலிச கட்சியாக விளங்குகிறது. 1920களில் ஐக்கிய இராச்சியத்தின் லிபரல் கட்சியைப் பொதுத்தேர்தல்களில் தோற்கடித்து ராம்சே மக்டோனால்டு தலைமையில் சிறுபான்மை அரசு (1924 மற்றும் 1929-31) அமைத்தது. 1940- 45களில் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவையில் அங்கம் ஏற்றது. போருக்குப் பின்னர் 1945இல் கிளெமென்ட் அட்லி தலைமையில் அரசு அமைத்தது. மேலும் 1964 -70 (ஹேரால்டு வில்சன்), 1974 - 79 (வில்சன்/ஜேம்ஸ் கல்லாகன்) காலகட்டங்களில் அரசு அமைத்துள்ளது.

கடைசியாக 1997ஆம் ஆண்டு முதல் 2010 வரை டோனி பிளேர்/ கார்டன் பிரவுன் தலைமையேற்ற அரசு அமைத்தது. 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் 258 இடங்களில் வென்று அலுவல்முறை எதிர்கட்சியாக விளங்குகிறது. வேல்சு நாடாளுமன்றத்தில் சிறுபான்மை அரசு அமைத்துள்ளது. இசுக்காட்லாந்தில் முதன்மை எதிர்கட்சியாக விளங்குகிறது. ஐரோப்பியநாடாளுமன்றத்தில் இதன் ஐரோப்பிய அணி, சோசலிச மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணி,13 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தக் கட்சி பன்னாட்டு சோசலிசம் அமைப்பில் அங்கம் வகிக்கிறது.

இந்தக் கட்சியின் தற்போதையத் தலைவராக எட் மிலிபாண்ட் உள்ளார்.

தொழிற்கட்சி பிரதமர்கள்[தொகு]

பெயர் ஒளிப்படம்் பிறந்த இடம் பதவிக்காலம்
ராம்சே மாக்டோனால்டு Ramsay MacDonald ggbain.29588.jpg இசுக்காட்லாந்து 1924; 1929 - 1931
கிளமெண்ட் அட்லீ Clement Attlee.PNG இங்கிலாந்து 1945 - 1950; 1950 - 1951
ஹெரால்டு வில்சன் Dodwilson.JPG இங்கிலாந்து 1964 - 1966; 1966 - 1970; பெப். 1974; அக்.1974 - 1976
ஜேம்ஸ் கால்லகன் James Callaghan.JPG இங்கிலாந்து 1976 - 1979
டோனி பிளேர் Tony Blair in 2002.png இசுக்காட்லாந்து 1997 - 2001; 2001 - 2005; 2005 - 2007
கார்டன் பிரவுன் GordonBrown1234 cropped.jpg இசுக்காட்லாந்து 2007 - 2010

மேற்கோள்கள்[தொகு]

  1. Labour Party Rule Book 2012. The Labour Party. 2012. p. 6. 
  2. How we work - How the party works  – Labour.org.uk - Retrieved 12 February 2012.
  3. "Labour Leadership Election 2010". Labour Party. பார்த்த நாள் 12 May 2010.

வெளி இணைப்புகள்[தொகு]

அலுவல்முறை கட்சி வலைத்தளங்கள்[தொகு]

பிற[தொகு]