பீட்டர் ஹிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பீட்டர் ஹிக்ஸ்
Higgs, Peter (1929)3.jpg
ஏப்ரல் 2009இல் மைகேல் அடியாவின் எண்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது பீட்டர் ஹிக்ஸ்
பிறப்பு 29 மே 1929 (1929-05-29) (அகவை 83)
பிறப்பிடம் டைன் மீதான நியூகாசில் , இங்கிலாந்து
தேசியம் பிரித்தானியர்
துறை இயற்பியல்
பணி நிறுவனம் எடின்பர்க் பல்கலைக்கழகம்
இலண்டன் இம்பீரியல் கல்லூரி
இலண்டன் பல்கலைக்கழக கல்லூரி
கல்வி கற்ற இடங்கள் கிங்ஸ் கல்லூரி, இலண்டன்
ஆய்வு நெறியாளர்   சார்லசு கூல்சன்
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்  
கிறிஸ்தபர் பிஷப்
லெவிஸ் ரைடர்
டேவிட் வாலசு
அறியப்படுவது வலுவற்ற மின் தத்துவத்தில் முறிந்த சமச்சீர்மை
விருதுகள் இயற்பியலுகான உல்ஃப் பரிசு (2004)
சகுராய் பரிசு (2010)
டிராக் பதக்கம்
மதம் இறை மறுப்பாளர்[1]

பீட்டர் வேர் ஹிக்ஸ் , (Peter Ware Higgs) (ராயல் சொசைடி ஃபெல்லோ, எடின்பர்க் ராயல் சொசைடி ஃபெல்லோ மற்றும் கிங்ஸ் கல்லூரி லண்டனின் ஃபெல்லோ) (பிறப்பு 29 மே 1929) ஓர் ஆங்கில தத்துவார்த்த இயற்பியலாளரும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மாண்புடன் ஓய்வுற்ற பேராசிரியருமாவார். [2]

1960களில் வலுவற்ற மின் தத்துவத்தில் இவர் முன்வைத்த சமச்சீர்மை முறிவு என்ற கருதுகோள் பொதுவாக அடிப்படைத் துகள்களில், குறிப்பாக W மற்றும் Z போசான்களில், திணிவு எவ்வாறு தோன்றுகிறது என்பதை விளக்கியதால் பெரிதும் அறியப்பட்டார். அவரைத் தவிர பிற அறிவியலாளர்களாலும் ஒரே நேரத்தில் முன்வைக்கப்பட்ட இந்த ஹிக்ஸ் செயல்பாடு ஹிக்ஸ் போசான் என்ற ஓர் புதிய துகள் நிலவுவதாக முன்னுரைத்தது. இந்தத் துகள் நவீன அறிவியலின் மிகவும் தேடப்பட்டுவரும் ஓர் பொருளாக கருதப்படுகிறது. [3][4]). இதுவரை இந்தத் துகளை எந்த துகள் முடுக்கி சோதனையிலும் காணாதபோதும் துகள் இயற்பியலின் செந்தரப் படிவத்தின் ஓர் முதன்மையான அங்கமாக ஹிக்ஸ் செயல்பாடு ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது. [5]

மேற்கோள்கள் [தொகு]

  1. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named NS
  2. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named Edit
  3. Griffiths, Martin (20070501) physicsworld.com The Tale of the Blog's Boson Retrieved on 2008-05-27
  4. Fermilab Today (20050616) Fermilab Results of the Week. Top Quarks are Higgs' best Friend Retrieved on 2008-05-27
  5. Rincon, Paul (20040310) Fermilab 'God Particle' may have been seen Retrieved on 2008-05-27

வெளியிணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_ஹிக்ஸ்&oldid=1367063" இருந்து மீள்விக்கப்பட்டது