சுச்சி நாக்காமுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுச்சி நாக்காமுரா (中村 修二, Nakamura Shūji, பிறப்பு: மே 22, 1954, இக்காட்டா, எஃகீமெ, சப்பான்) சப்பானில் பிறந்து, ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டா பார்பராவில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்[1] . இவர் 2014 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை இசாமு அக்காசாக்கி, இரோசி அமானோ ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார். நீலநிற ஒளியுமிழ் இருமுனையமாகிய நீல ஒளியீரியைக் கண்டுபிடித்தமைக்காக இப்பரிசு இவ்வாண்டு அளிக்கப்பட்டுள்ளது.

பெருமைகளும் பரிசுகளும்[தொகு]

  • 2001 அசாஃகி பரிசு (Asahi Prize) - சப்பானிய செய்தித்தாள் அசாஃகி சிம்புன் வழங்கும் பரிசு.
  • 2002 இயற்பியலுக்கான பெஞ்சமின் பிராங்கிளின் பதக்கம் (Benjamin Franklin Medal in Physics), பிராங்கிளின் கழகம் வழங்குவது.
  • 2006 பின்லாந்தின் மில்லேனியம் தொழில்நுட்பப்பரிசை வென்றார். இது திறன்மை மிக்க, மலிவான ஒளிவாய்களை உருவாக்குவதில் இவருடைய பங்குக்காக அளிக்கப்பட்டது[2][3]
  • 2009 இசுரேலின் தெக்குனியான் நிறுவனம் வழங்கும் ஆர்வி பரிசு[4]
  • 2012 இல் சிலிக்கன் பள்ளத்தாக்கின் புத்தாக்கப் படைப்புரிம சட்ட அமைப்பின் அவ்வாண்டுக்கான புத்தாக்குநர் பரிசை வென்றார்[5]
  • 2014 இயற்பியலுக்கான நோபல் பரிசு- உடன் பெற்றவகள் பேராசிரியர் இசாமு அக்காசாக்கி மற்றும் பேராசிரியர் இரோசி அமானோ- நீல நிற ஒளியுமிழ் இருமுனையம் கண்டுபிடித்தமைக்காக[6].

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Shuji Nakamura". University of California, Santa Barbara. Archived from the original on 2010-07-15. பார்க்கப்பட்ட நாள் 2008-07-31.
  2. Shuji Nakamura wins the 2006 Millennium Technology Prize [1] பரணிடப்பட்டது 2009-01-11 at the வந்தவழி இயந்திரம்
  3. "Top prize for 'light' inventor". BBC News. 2006-09-08. பார்க்கப்பட்ட நாள் 2006-09-08.
  4. "Harvey Prize". Archived from the original on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
  5. "SVIPLA Presents Inventor of the Year - Shuji Nakamura, Ph.D." Silicon Valley Intellectual Property Law Association. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013.
  6. "The 2014 Nobel Prize in Physics - Press Release". Nobelprize.org. Nobel Media AB 2014. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.

மேலும் படித்தறிய[தொகு]

  • Shuji Nakamura, Gerhard Fasol, Stephen J. Pearton, The Blue Laser Diode : The Complete Story, Springer; 2nd edition, October 2, 2000, (ISBN 3-540-66505-6)
  • Bob Johnstone Brilliant!: Shuji Nakamura and the revolution in lighting technology, Prometheus Books, 2007 ISBN 1-59102-462-5

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுச்சி_நாக்காமுரா&oldid=3554937" இலிருந்து மீள்விக்கப்பட்டது