கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்
| கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் | |
|---|---|
| பிறப்பு | 6 சூன் 1850 |
| பிறப்பிடம் | Fulda, Hessen-Kassel, ஜெர்மனி |
| இறப்பு | ஏப்ரல் 20 1918 (அகவை 67) |
| இறப்பிடம் | Brooklyn, New York, USA |
| தேசியம் | German |
| துறை | Physics |
| பல்கலைக்கழகம் | University of Marburg University of Berlin |
| ஆய்வு நெறியாளர் | August Kundt |
| குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
Leonid Isaakovich Mandelshtam Albert Schweizer |
| அறியப்படுவது | Cathode ray tube, Cat's whisker diode |
| விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1909) |
கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்(Karl Ferdinand Braun' 6 ஜுன் 1850 – 20 ஏப்ரல் 1918). ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர். இயற்பியலாளர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை, வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறையில் ஆய்வு செய்து, வானொலியைக் கண்டறிந்த அறிஞர் மார்க்கோனியுடன் 1909-ல் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்.
[தொகு] இளமை
கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், ஜெர்மனியில் உள்ள 'ஹெஸ்ஸன் கேசல்' என்ற பகுதியில் ஃபுல்டா என்ற நகரத்தில் 1850 ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று பிறந்தார். உள்ளூரில் இலக்கணப்பள்ளி ஒன்றில் சேர்ந்து கல்வி பயின்றார். இவர் இளமையில் கல்வியில் ஆர்வம் மிகுந்தவராகவும், அறிவியலில் மிகச் சிறந்த அறிவு படைத்தவராகவும் திகழ்ந்தார். இவர் சிறுவயதிலேயே அறிவியல் கட்டுரைகள் எழுதி அவை அனைத்தும் பல இதழ்களில் வெளியிடப்பட்டன.
அறிவியல் ஆசிரியராக உருவாக வேண்டும் என்றா ஆர்வத்துடன் அறிவியலையும், கணிதத்தையும் பாடங்களாக எடுத்துக்கொண்டு 'மார்பர்க் பல்கலைக் கழகத்தில்' (University of Marburg) சேர்ந்தார். பிறகு பெர்லின் பல்கலைக் கழகத்திற்கு மாறி அங்கு இயற்பியலைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். 1872-ல் முதுகலைப் பட்டத்தையும் பிறகு முனைவர் பட்டத்தையும் பெற்றார்.