மார்க்கோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi)
Marconi.jpg
பிறப்பு 25 ஏப்பிரல், 1874
பொலோனியா, இத்தாலி
இறப்பு 20 ஜூலை, 1937
தொழில் மின் பொறியாளர்

மார்க்கோனி (ஏப்ரல் 25, 1874 - ஜூலை 20, 1937) வானொலியைக் கண்டு பிடித்தவர். "வானொலியின் தந்தை" எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை Karl Ferdinand Braun இடன் இணைந்து பெற்றார். 1874 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 இல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர். தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். பதினாறு வயதிலேயே, 1890 மார்க்கோனிக்குக் கம்பியிலாத் தொலைத் தொடர்பில் ஆர்வம் ஏற்பட்டு ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். இருபத்தி ஒன்றாம் வயதில் 1895 முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில் 'திசைதிரும்பும் மின்கம்பம் ' [Directional Antenna] மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார். 1897 இல் கரையிலிருந்து கப்பலுக்கு 18 மைல் தூரம் தொடர்பு அமைத்துக் காட்டினார். 1899 இல் இங்கிலிஷ் சிறுகடலைத் தாண்டி இங்கிலாந்திற்கும் ஃபிரான்சுக்கும், எந்தவிதக் கால நிலையிலும் இயங்கும், கம்பியிலாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார். 1905 இல் வர்த்தகக் கப்பல்கள், யுத்தப்படைக் கப்பல்கள் பல மார்க்கோனியின் கம்பியிலாத் தந்திக் கருவியை நிறுவி, கரை நிலையங்களுடன் தொடர்பு கொண்டன. மார்க்கோனியின் அரிய சாதனங்கள் அடுத்து பிரிட்டாஷ், இத்தாலிய கடற்படைக்கு அதிகமாகப் பயன் பட்டன. 1907 இல் அவை இன்னும் சீர்ப்படுத்தப் பட்டு அட்லண்டிக் தொலைத் தொடர்பு மார்க்கம் எல்லோரது பொதுப் பழக்கத்திற்கும் உபயோக மானது.1937 இல் இவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்