அடம் ரீஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அடம் கை ரீஸ் Adam Guy Riess |
|
|---|---|
![]() வானியலுக்கான ஷா பரிசுடன் அடம் ரீஸ் (2006) |
|
| பிறப்பு | டிசம்பர் 1969 |
| பிறப்பிடம் | வாசிங்டன், டி.சி., ஐக்கிய அமெரிக்கா |
| வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
| தேசியம் | அமெரிக்கர் |
| துறை | இயற்பியல் |
| பணி நிறுவனம் | ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம், ஹார்வர்டு பல்கலைக்கழகம் |
| அறியப்படுவது | விரிவடையும் பேரண்டம் / கரிய ஆற்றல் |
| விருதுகள் | ஷா பரிசு (2006) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2011) |
அடம் கை ரீஸ் (Adam Guy Riess, பிறப்பு: டிசம்பர் 1969) ஒரு அமெரிக்க வானியற்பியலாளர் . இவர் சுப்பர்நோவா வகை 1 என்ற விண்மீன் வெடிப்பை ஆராய்ந்தமைக்காக அறியப்படுகிறார். பேரண்டம் விரைவாக விரிவடைவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தமைக்காக இவருக்கும் சோல் பெர்ல்மட்டர், மற்றும் பிறையன் சிமித் ஆகியோருக்கும் 2006 ஆம் ஆண்டுக்கான வானியலுக்கான ஷா பரிசும், 2011 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசும் பகிர்ந்தளிக்கப்பட்டன.[1].
இவற்றையும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Nobel physics prize honours accelerating Universe find". பிபிசி. அக்டோபர் 4, 2011. http://www.bbc.co.uk/news/science-environment-15165371.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் அடம் கை ரீஸ் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Dark Energy Co-Discoverer Adam Riess Shares Shaw Prize in Astronomy for 2006
- Nobel Prize in Physics 2011 Announcement
|
||||||||||||||||||||
