மேக்ஸ் பிளாங்க்
| மக்ஸ் பிளாங்க் | ||
|---|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 23, 1858 | |
| பிறப்பிடம் | கியெல், ஹோல்ஸ்ட்டீன் | |
| இறப்பு | அக்டோபர் 4 1947 (அகவை 89) |
|
| இறப்பிடம் | கொட்டிங்கன், மேற்கு ஜேர்மனி | |
| தேசியம் | ஜேர்மனி | |
| துறை | இயற்பியல் | |
| பணி நிறுவனம் | கீல் பல்கலைக் கழகம் பேர்லின் பல்கலைக் கழகம் கொட்டிகன் பல்கலைக் கழகம் கைசர்-வில்ஹெல்ம்-Gesellschaft |
|
| பல்கலைக்கழகம் | Ludwig-Maximilians-Universität München | |
| ஆய்வு நெறியாளர் | அலெக்சாண்டர் வொன் பிரில் | |
| குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
குஸ்தாவ் லுட்விக் ஹேர்ட்ஸ் எரிக் கிரெஸ்ச்மன் வால்த்தர் மைஸ்னர் வால்ட்டர் ஸ்கொட்கி மக்ஸ் வொன் Laue மக்ஸ் ஆபிரகாம் மொரிட்ஸ் ஷிலிக் Walther Bothe |
|
| அறியப்படுவது | பிளாங்க்கின் மாறிலி Planck postulate Planck's law of black body radiation |
|
| விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1918) | |
| மதம் | கிறிஸ்தவர் | |
| பிற குறிப்பு | He is the father of Erwin Planck who was hanged in 1945 by the Gestapo for his part in the July 20 plot. | |
மக்ஸ் பிளாங்க் (Max Planck) எனப் பரவலாக அறியப்பட்ட கார்ல் ஏர்ண்ஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க் (ஏப்ரல் 23, 1858 – அக்டோபர் 4, 1947) ஒரு ஜேர்மன் இயற்பியலாளர் ஆவார். இவரே கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாடுகளின் நிறுவனர் (Quantum Theories)எனக் கருதப்படுவதோடு இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
பிளாங்க் ஜெர்மனியின் கீல் நகரில் 1858 ஆம் ஆண்டு பிறந்தார்.மரபுவழியாக அறிவார்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். இவரது தந்தை வழிக் கொள்ளுப் பாட்டனும், பாட்டனும் இறையியல் கொட்டிங்கனில் பேராசிரியராகப் பணியாற்றியவர்கள். தந்தை கீயெல்லிலும், மியூனிச்சிலும் ஒரு சட்டத்துறைப் பேராசிரியராக இருந்தார். தந்தையின் உடன்பிறந்தார் ஒருவர் நீதிபதியாகப் பதவி வகித்தார். இவர் பெர்லின் முனிச் பலகலைக் கழகத்தில் பயின்று, தமது 21-ஆம் வயதில் முனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் 'டாக்டர்' பட்டம் பெற்றார். சிறிது காலம் முனிச் பல்கலைக் கழகத்திலும் பிறகு கீல் பல்கலைக் கழகத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1880 ஆம் ஆண்டில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் இவர் பேராசிரியர் ஆனார். அங்கு 1928 ஆம் ஆண்டில் தமது 70ஆம் வயதில் ஓய்வு பெறும் வரையில் பணிபுரிந்தார்.