என்ட்ரிக் லொரன்சு
|
இந்தக் கட்டுரையில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது.. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை பல நாட்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். |
| என்ட்ரிக் அந்துவான் லொரன்சு Hendrik Antoon Lorentz |
|
|---|---|
| பிறப்பு | 18 சூலை 1853 |
| பிறப்பிடம் | ஆருனெம், நெதர்லாந்து |
| இறப்பு | பெப்ரவரி 4 1928 (அகவை 74) |
| இறப்பிடம் | ஆருலெம், நெதர்லாந்து |
| தேசியம் | டச்சுக்காரர் |
| துறை | இயற்பியல் |
| பல்கலைக்கழகம் | லைடன் பல்கலைக்கழகம் |
| ஆய்வு நெறியாளர் | பீட்டர் ரிச்கி |
| அறியப்படுவது | மின்காந்தக் கதிர்வீச்சுக்கான கருத்தியல் விளக்கம் லொரன்சு விசை |
| விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1902) |
என்ட்ரிக் லொரன்சு (Hendrik Lorentz, 18 சூலை, 1853 – 4 பெப்ரவரி 1928) ஒரு டச்சு இயற்பியலாளர். கதிர்வீச்சில் காந்தத்தின் தாக்கங்கள் பற்றிய இவருடைய ஆய்விற்காக இவருக்கும் இவருடன் துணை பிரிந்து உதவிய இவருடைய முன்னாள் மானவர் பைடர் சீமன்(Pyder zeeman) என்பவருக்கும் இணைந்து 1902-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. வெளி மற்றும் காலத்தை விளக்குவதற்காக ஐன்ஸ்டைன் பயன்படுத்திய லொரன்சு சமன்பாட்டுரு மாற்றம் லொரன்சால் தருவிக்கப்பட்டது. மேலும் லொரன்சு விதி, லொரன்சு விசை, லொரன்சின் பகிர்ந்தளிப்பு ஆகியவை இவருடைய ஆய்வின் வெளிப்பாடுகளாகும்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கை வரலாறு
[தொகு] சிறு வயதில்
என்ட்ரிக் லொரன்சு ஆலந்திலுள்ள ஆருனெம் என்ற இடத்தில் ஓரளவு வசதியான லொரன்சு குடும்பத்தில் 18 சூலை 1853 இல் பிறந்தார். ஆருனெமில் அப்போது புதிதாக துவக்கப்பட்டிருந்த உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். 1870 ஆம் ஆண்டு லைடன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இயற்பியல் மற்றும் கணிதவியல் கற்றார். அங்கு வானியல் பேராசிரியராகவிருந்த பிரெடரிக் கெய்சரின் கற்பித்தல் முறையால் பெரிதும் கவரப்பட்டார் லொரன்சு; அவரது தூண்டுதலினாலேயே இயற்பியலாளராகவும் ஆனார். 1875-இல் ’ஓளி எதிரொளித்தல் மற்றும் ஒளி விலகல் நிகழ்வுகளுக்கான கோட்பாடுகள்’ குறித்து அவர் செய்த ஆய்வின் அடிப்படையில் லொரன்சுக்கு லைடன் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டத்தை அளித்தது.