ஆலிசு மன்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலிஸ் மன்ரோ
Alice Munro
பிறப்புஆலிஸ் ஆன் லெயிட்லா
10 சூலை 1931 (1931-07-10) (அகவை 92)
விங்கம், ஒன்ராறியோ, கனடா
மொழிஆங்கிலம்
தேசியம்கனேடியர்
வகைசிறுகதைகள்
குறிப்பிடத்தக்க விருதுகள்மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு (2009)
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2013)
துணைவர்ஜேம்சு மன்ரோ (1951–1972)
ஜெரால்ட் பிரெம்லின் (1976–2013)

ஆலிசு ஆன் மன்ரோ (Alice Ann Munro, பிறப்பு: 10 சூலை 1931) என்பவர் கனேடிய எழுத்தாளர் ஆவார். இவர் 2013ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு மற்றும் 2009ஆம் ஆண்டிற்கான மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு ஆகியவற்றை தனது படைப்புகளுக்காக வென்றுள்ளார். இவர் மும்முறை கனடாவின் புனைகதைக்கான ஆளுநர் விருதினை (Governor General's Award) வென்றுள்ளார்.[1][2] இவர் தனது படைப்புகளில் தென்மேற்கு ஒன்ராறியோவிலேயே அதிகம் மையப்படுத்தியிருக்கின்றார்.[3] இவர் புனைகதையின் மிக பெரிய சமகால எழுத்தாளர் என்றும் "கனடாவின் செக்கோவ்" என்றும் புகழப்படுள்ளார்.[4].82 வயதாகும் முன்ரோ கடந்த 40 ஆண்டுகளில் அவர் ஏராளமான இலக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.[5]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவரது தந்தையார் பெயர் லெயிட்லாவ். இவர் ஒரு விவசாயி. இவரின் தாய் அன்னி கிளார்க், இவர் ஒரு பள்ளி ஆசிரியை. ஆலிசு மன்ரோ தனது இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். இவரது முதல் கதையான ஒரு நிழலின் வடிவம் (The Dimensions of a Shadow) 1950 ஆம் ஆண்டில் அவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது வெளியானது. அந்நேரத்தில் இவர் உணவு பரிமாறுபவர் மற்றும் நூலக எழுத்தர் ஆகிய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். முன்ரோ ஜேம்ஸ் என்பவரை 1951-ல் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு ஸீய்லா, கேத்தரின், ஜென்னி ஆகிய குழந்தைகள் பிறந்தன. இதில் கேத்தரின் பிறந்த 15 மணி நேரதில் இறந்து விட்டார். 1963-ல் இத்தம்பதியினர் விக்டோரியா பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு முன்ரோ புத்தகங்கள் (Munro's Books) என்ற புத்தகக் கடையைத் தொடங்கினர். அக்கடையானது இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. 1966-ல் இவர்களுக்கு ஆண்ட்றா என்ற குழந்தை பிறந்தது. இத்தம்பதியினர் 1972-ல் விவாகரத்து செய்தனர். பின்னர் முன்ரோ ஜெரால்ட் ஃப்ரீம்லின் எனும் புவியியலாளரைத் திருமணம் செய்து கொண்ட்டர். ஜெரால்ட் ஃப்ரீம்லின் 2013 ஆம் ஆண்டு மரனமடைந்தார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Nobel Prize in Literature 2013 - Press Release" (PDF). Archived from the original (PDF) on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2013-10-10.
  2. "Alice Munro wins Man Booker International prize". The Guardian. 27 மே 2009. http://www.guardian.co.uk/books/2009/மே/27/alice-munro-man-booker-international-prize. 
  3. Marchand, P. (29 ஆகஸ்ட் 2009). "Open Book: Philip march and on Too Much Happiness, by Alice Munro". The National Post இம் மூலத்தில் இருந்து 2011-08-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110825143705/http://network.nationalpost.com/NP/blogs/afterword/archive/2009/08/29/open-book-philip-marchand-on-too-much-happiness-by-alice-munro.aspx. பார்த்த நாள்: 5 செப்டம்பர் 2009. 
  4. Merkin, Daphne (24 அக்டோபர் 2004). "Northern Exposures". New York Times Magazine. http://www.nytimes.com/2004/10/24/magazine/24MUNRO.html. பார்த்த நாள்: 25 பெப்ரவரி 2008. 
  5. "கனடாவை சேர்ந்த ஆலிக் மன்ரோவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!". Archived from the original on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2013-10-10.
  6. "Gerald Fremlin (obituary)". Clinton News-Record. April 2013. http://www.yourlifemoments.ca/sitepages/obituary.asp?oId=700628. பார்த்த நாள்: 1 July 2013. 
விருதுகள்
முன்னர்
மோ யான்
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
2013
பின்னர்
பத்திரிக்கு மொதியானோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிசு_மன்ரோ&oldid=3543073" இலிருந்து மீள்விக்கப்பட்டது