ஹிக்ஸ் போசான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹிக்ஸ் போசான் அல்லது ஹிக்ஸ் போசோன் (Higgs Boson) என்பது ஒரு நிறையுடைய ஒரு அணுத் துகள் ஆகும். தற்போது இது Standard Model படி ஒரு கருதுகோள் மட்டுமே. இதுவரை இது பரிசோதனை மூலமாக நிரூபிக்கப்படவில்லை. பெரும் ஹாட்ரான் மோதி உதவியுடn நடைபெறும் பரிசோதனைகளில் இந்த துகள் நிரூபிக்கப்படலாம். இந்த கிக்ஸ் போசானை கடவுள் துகள் (God Particle) என்றும் குறிப்பிடுவர்.
அணுவின் அடிப்படை அலகுகளான இம்மிகள் பற்றி அறிய பகுதித்தத்துவத்தின் (Quantum Physics) அடிப்படையில் நாம் அணுவை பிளந்து அதன் உட்கருவில் நுழைந்து அதன் உட்கூறுகளை எலெட்ரான் மைக்ராஸ்கோப், ஸ்கேன்னிங் டன்னலிங் மைக்ராஸ்கோப் போன்றவைகளைக் கொண்டு ஆராய்ந்த நம் அனுபவம் குவார்க்ஸ், லெப்டான், போஸ்ஸான், என்ற மூன்று பிரிவுகளாக விரிகிறது. இதில் முதலிரண்டும் அணுவின் உட்கருவைப் பற்றிய ஆராய்ச்சிகள். 'போஸ்ஸான்', மேற்சொன்ன எலெக்ட்ரான்களின் சுழற்சி வேகத்திற்கு ஈடுகொடுத்து அதைப்பின் தொடர்ந்த மனிதனின் ஆராய்ச்சி பற்றியது. இந்திய விஞ்ஞானி சத்தியேந்திரநாத் போஸ் கண்டுபிடித்த போஸ்ஸான்கள், மனிதனுக்கு இந்த ஆராய்ச்சியில் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படையில் போஸ்ஸான்கள் - ஃபோட்டான்கள், குளூஆன்கள், வீக்கான்கள் என மூன்று வகைப் படும். இவைகள் அணுக்களில் ஒரு இம்மியிலிருந்து மற்றவற்றிற்கு சக்தியைக் கடத்துவன. அண்மையில் கண்டறியப் பட்ட கிரேவிட்டான், அணுக்கள் ஒன்றிலிருந்து மற்றவற்றிற்கு புவிஈர்ப்பு விசையைக்கடத்தும் வல்லமையைக் கொடுப்பது என்று நிரூபனமாகியுள்ளது.
இந்த வரிசையில் அணுக்களுக்கு பொருள் திணிவை அளிக்கும் திறன் கொண்ட துகள்கள் போஸ்ஸான்கள்தான் என்று 1960-ல் பிரிட்டீஷ் பௌதிக விஞ்ஞானி டாக்டர் பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 'Origin of Mass' எனும் தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதைத்தான் 'ஹிக்ஸ் போஸ்ஸான்' என்றும் 'கடவுள் துகள்' (God Particle) என்றும் அழைக்கின்றனர். இதுவே அணுவின் கட்டமைப்புக்கு ஆதிமூலமாக இருக்கக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கை!
அண்டத்தின் தோற்றம் என்பது சுமார் 15 அல்லது 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட 'BIG BANG' எனப்படும் பெரும் பிரளயத்துக்குப் பின் உருவான வெப்பமிகுந்த தீக்கோளம் விரிந்து பரவி குளிர, அதில் தோன்றிய வாயுக்கள் சுருங்கி செறிவடைந்து அடுத்த ஐந்து பில்லியன் ஆண்டுகளில் பல மாற்றங்களுக்குட்பட்டன. பின்னர் கொத்து கொத்தாக அவ்வாயுக்கள் திரண்டு பிரபஞ்சம் முழுக்க பால்வீதிகளாக மாற்றம் கண்டன. காலப்போக்கில் பால்வீதிகள் விரிந்துபரவ, மேலும் சில பில்லியன் வருட மாற்றங்களுக்குப் பின் பால்வீதிகளில் நட்சத்திரங்களும், பிற்பாடு கிரகங்களும் தோன்றியதாகவும், நட்சத்திரங்களுக்கும் பிறப்பு, இளமை, முதுமை, இறப்பு என்று உண்டு என்றும் விஞ்ஞானம் சொல்கிறது.
இதே போன்றதொரு செயற்கை பிரளயத்தை உருவாக்கி பிரபஞ்ச ரகசியத்தை அறியும் மனிதனின் முயற்சியாக இப்போது அண்மையில் (செப் 10, 2008) ஜீரா மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய கூட்டமைப்பின் (CERN) 300 அடி ஆழம், 27 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்ட ராட்சத ஆய்வுக் கூடத்தில் LHC (Large Hadron Collidar) அதாவது ஹாட்ரான் முடுக்கி என்ற சாதனத்தை நிறுவி அதில் புரோட்டான் துகள்களை மோத விடுகின்றனர்.
இச்சோதனையில் பிரபஞ்சத்தில் இரண்டறக் கலந்திருக்கும் 'கடவுள் துகள்' வெளிப்படும்போது அதன் உண்மைத்தன்மையை நம்மால் அறிந்து கொள்ள முடியும். மேலும் இதுவரை மனிதனால் கண்டறியப் படாத பருப் பொருள் (dark matter) பற்றிய உண்மைகள் வெளிப்படும். பின் புரோட்டான்கள் அழிந்து உயிர்க் குழம்பு பிரபஞ்சத்தில் எவ்வாறு உருவானது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்
- The World book Encyclopedia
- The Universe and Dr.Einstein by Lincoln Barnett