அடிப்படைத் துகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடிப்படைத் துகள் (elementary particle) என்பது மேலும் பகுக்க இயலாத துகள் ஆகும். இவை போசான்களாகவோ அல்லது ஃபெர்மியான்களாகவோ இருக்கும்.
அணு ஓர் அடிப்படைத் துகளன்று. ஏனெனில் அது புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான்களால் ஆனது. புரோட்டானும் ஓர் அடிப்படைத் துகளன்று. ஏனெனில் அது குவார்க்குகளால் ஆனது. குவார்க் ஓர் அடிப்படைத் துகள் ஆகும். இதை மேலும் பகுக்க இயலாது.
ஒவ்வொரு அடிப்படைத் துகளுக்கும் நிறை, மின்சுமை, தற்சுழற்சி (spin) என்று மூன்று முக்கியப் பண்புகள் உண்டு.