ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (Rashtriya Swayamsevak Sangh, தேசியத் தொண்டர் அணி, ஆர்.எஸ்.எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர்.எஸ்.எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி) என அழைக்கப்படுகின்றது. இது 1925 ல் டாக்டர் கே. பி. எட்ஜ்வார் எனபவரால் நிறுவப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. மியான்மரில் சனதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்) மற்றும் சில இடங்களில் இந்து சுயம்சேவாக் சங்கம் ஆக இயங்குகின்றது.
இதன் முக்கியக் கொள்கை கலாச்சார தேசியவாதம் எனப்படுகிற முழு மனிதப்பற்றைக் கொண்டு உயிரான, தனித்துவம் மற்றும் நன்னெறிகளைக் கொண்ட பாரம்பரிய இந்தியாவிற்கு புத்துயிர் அளிப்பது. தேசத்துக்கு சேவை செய்வதை அன்னை இந்தியாவுக்கு (பாரத மாதா) சேவை செய்வதாகக் கொண்டு இந்தியாவை தன் தாய் நாடாக நினைத்து அதை பாதுகாப்பது.
ஆர்.எஸ்.எஸ் நேரடியாக தேர்தலில் பங்கு கொள்வதில்லை. அதன் கொள்கையை ஒற்றிருக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும். அதன்படி ஆதரித்த கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியுடன் இடையில் சில முரண்பாடுகள் கண்டதால் ஆதரவளிக்க முன்வரவில்லை. ஆர்.எஸ்.எஸ் சங்கரிவார் அமைப்புடன் அதிகத் தொடர்புடையது.
ஆர் எஸ் எஸ் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது.