எட்னா எரிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்னா எரிமலை
எட்னா எரிமலை
உயர்ந்த இடம்
உயரம்3,350 m (10,990 அடி), (மாற்றத்துக்குட்பட்டது)[1]
இடவியல் புடைப்பு3,329.6 m (10,924 அடி)
தரம்: 59வது
இடவியல் தனிமை998.79 km (620.62 mi) Edit on Wikidata
நிலவியல்
பாறையின் வயது500,000 வருடங்கள்
மலையின் வகைஸ்ட்ரேட்டோ எரிமலை (Stratovolcano)
கடைசி வெடிப்பு2013 - 2014 (நிகழ்வில்)
ஏறுதல்
எளிய அணுகு வழிமவுண்டன் பைக் (mountain bike)
உலகப் பாரம்பரியக் களம்
எட்னா எரிமலை
எட்னா எரிமலை
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைஇயற்கையானது
ஒப்பளவுvii, viii, ix
உசாத்துணை1427
UNESCO regionஐரோப்பா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2013 (37வது தொடர்)

எட்னா எரிமலை (Mount Etna) ஐரோப்பாவின் தென் இத்தாலியில் சிசிலித் தீவில் உள்ளது. ஜூன் 2013 இல் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது[2].

4000 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பொங்கியது. இதுவரை 90 முறை பொங்கியுள்ளது. 1669 ஆம் ஆண்டு பொங்கியதில் 20000 பேர் இறந்தனர்[3]. எட்னா எரிமலையை ஆராய்வதற்கு இங்கிலாந்திலிருந்து 16 பயணிகள் 2000 ஆம் ஆண்டில் அங்கு சென்றார்கள்.

1992 ஆம் ஆண்டில் வெடித்துச் சிதறிய எட்னா எரிமலை 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் பகல் அன்று வெடித்தது. சிசிலியில் கடானியா வானூர்தி நிலையம் அருகில் இந்த எரிமலை உள்ளது. எனவே எரிமலை வெடித்தபோது வெளியேறிய புகை வானிலும் விமான நிலையத்திலும் பரவியதன் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டது.

எட்னா எரிமலையின் மண் வேளாண்மைக்கு ஏற்றதாக உள்ளது. எனவே மலையின் அடிவாரச் சரிவில் திராட்சைத் தோட்டங்களும் பிற பயிர்களும் வளர்க்கிறார்கள். எட்னா எரிமலையைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் அங்கு செல்கிறார்கள்.

16 மார்ச் 2017 அன்று எட்னா எரிமலை மீண்டும் வெடித்து தீக்குழம்புகளைக் கக்கியது.[4][5] இதனை படம் எடுக்கச் சென்ற பிபிசி ஊடகவியலாளர்கள் வெடித்துத்து சிறிய தீக்குழம்புகளிலிருந்து மயிரிழையில் தப்பினர்.[6]

உசாத்துணை[தொகு]

  1. The elevation varies with volcanic activity.the volcano last erupted on the 27th of January 2014 .It is frequently given as 3,350 m (10,990 அடி), but many sources that support this concede that it is approximate. The coordinates given, which are consistent with SRTM data, are from a 2005 GPS survey. The elevation data are based on a LIDAR (Light Detection and Ranging) survey carried out in June 2007, see Neri, M.; et al. (2008), "The changing face of Mount Etna's summit area documented with Lidar technology", Geophysical Research Letters, 35: L09305, Bibcode:2008GeoRL..3509305N, doi:10.1029/2008GL033740 {{citation}}: Explicit use of et al. in: |last2= (help)
  2. Mount Etna Becomes a World Heritage Site, Italy Magazine, 4 May 2013
  3. "Mount Etna (volcano, Italy)". (the Encyclopædia Britannica has been wrongly cited as one source of this false information).
  4. Etna volcano updates and eruption news
  5. "எட்னா எரிமலை மீண்டும் சீற்றம் - நெருப்புக்கங்குகள் வெடித்துச் சிதறுவதால் பொதுமக்கள் வெளியேற்றம்". Archived from the original on 2017-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
  6. எரிமலையில் அகப்பட்ட பிபிசி குழு: நூலிழையில் உயிர் தப்பினர்

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
எட்னா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்னா_எரிமலை&oldid=3850635" இலிருந்து மீள்விக்கப்பட்டது