ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விக்டோரியா
ஐக்கிய இராச்சியத்தின் அரசியும், இந்தியாவின் பேரரசியும் (more...)
Queen Victoria -Golden Jubilee -3a cropped.JPG
ஆட்சி 20 ஜூன் 1837 – 22 ஜனவரி 1901
(&&&&&&&&&&&&&063.&&&&&063 years, &&&&&&&&&&&&0216.&&&&&0216 days)
முடிசூடல் 28 ஜூன் 1838
முன்னிருந்தவர் வில்லியம் IV
பின்வந்தவர் எட்வார்ட் VII
Consort ஆல்பர்ட் (சாக்சே-கோபர்க்-கோத்தா)
பிள்ளைகள்
விக்டோரியா, ஜேர்மன் பேரரசி
எட்வார்ட் VII
அலிஸ், ஹேசேயின் கிராண்ட் டியூச்சஸ்
ஆல்பிரட், டியூக், சாக்சே-கோபர்க்-கோத்தா
ஹெலனா, இளவரசி கிறிஸ்டியன் ஷெல்ஸ்விக்-ஹொல்ஸ்டீன்
Louise, Duchess of Argyll
Arthur, Duke of Connaught
லியோபோல்ட், டியூக் அல்பனி
Beatrice, Princess Henry of Battenberg
முழுப்பெயர்
Alexandrina Victoria
பட்டங்கள்
HM The Queen
HRH Princess Alexandrina Victoria of Kent
முடிக்குரிய மாளிகை House of Hanover
முடிக்குரிய கீதம் God Save the Queen
தந்தை Edward Augustus, Duke of Kent
தாய் விக்டோரியா (சக்சே-கோபர்க்-சால்பெல்ட்)
பிறப்பு மே 24 1819
கென்சிங்டன் மாளிகை, இலண்டன்
Baptised 24 ஜூன் 1819
கென்சிங்கன் மாளிகை, இலண்டன்
இறப்பு ஜனவரி 22 1901 (அகவை 81)
ஆஸ்போர்ன் மாளிகை, Isle of Wight, ஐக்கிய இராச்சியம்
அடக்கம் 2 பெப்ரவரி 1901
புரொக்மோர், விண்ட்சர், பேர்க்ஷயர், ஐக்கிய இராச்சியம்


விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா, Alexandrina Victoria, மே 24, 1819ஜனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாள் முதலும், இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை பிரித்தானியாவை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விடக் கூடியது ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே ஐக்கிய இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சி ஆகிவிட்டது. இதில் அரசியோ அரசனோ மிகக் குறைந்த அரசியல் அதிகாரத்தையே கொண்டிருந்தனர். எனினும் விக்டோரியா ஒரு மிக முக்கியமான குறியீட்டு நபர் என்னும் நிலையில் மிகத் திறமையாகவே பணியாற்றி வந்தார். இவரது காலம் தொழிற் புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது.

இவர் முழுவதுமாக ஜெர்மானிய வழியினர். மூன்றாம் ஜார்ஜின் பேத்தியும், இவருக்கு முன் ஆட்சியில் இருந்த நான்காம் வில்லியத்தின் பெறாமகளும் ஆவார். இவர் தனது காலத்தில் தனது ஒன்பது பிள்ளைகளுக்கும், 42 பேரப் பிள்ளைகளுக்கும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஐரோப்பாவை ஒன்றிணைத்தார். இது அவருக்கு, "ஐரோப்பாவின் பாட்டி" என்னும் பட்டப் பெயரை ஈட்டிக் கொடுத்தது. இவர் புனித ரோமன் பேரரசின், பேரரசியான மரியா தெரேசாவின் இரண்டு விட்ட சகோதரியும் ஆவார்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்