கரும்புலிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரும்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாகும். இது தமது இலக்கை நிறைவு செய்ய தற்கொலை தாக்குதலில் ஈடுபடத் துணியும் படையணியாகும். இவர்கள், உலகில் பயங்கரமானதும் கட்டுப்பாடு மிக்கதுமான தற்கொலை படையணியாக விளங்கினார்கள். 1987 ஜூலை 5 முதல் 2007 ஜூன் 27 வரை 322 கரும்புலிகள் கடலிலும் தரையிலும் நடைபெற்ற சமர்களிலும் வேறு தாக்குதல்களிலும் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 81 பேர் தரைக்கரும்புலிகளும் 241 பேர் கடற்கரும்புலிகளும் ஆவர்.[1]. பெரும்பாலானோர் இலங்கையில் எல்லைக்குள் மரணமடைந்தனர். இலங்கை குடியரசுத் தலைவர் ரணசிங்க பிரேமதாசா கரும்புலிகளின் தாக்குதலில் இறந்தவரெனக் கருதப்படுகின்றது.