கரவெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரவெட்டி
Gislanka locator.svg
Red pog.svg
கரவெட்டி
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.806122° N 80.200681° E
கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)

அமைவிடம்: 9°48′22″N, 80°12′3″E கரவெட்டி இலங்கையின் வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இதன் எல்லைகளாக உடுப்பிட்டி, புலோலி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

[தொகு] சிறப்புகள்

  • கரவை வேலன் கோவை - கரவெட்டி வேலாயுதபிள்ளை என்பவர் மேல் பாடப்பட்ட் நூல். அதில் இருந்து ஒரு செய்யுள்:
"முத்தம் பொதியும் பவளந் திறந்து முறையினும்பேர் துத்தம்
பயின்மொழி யாற்சொல்லுஞ் சால்வழிச் சூழ்பெருகும்
நத்தம் பயிலுங் கரவையில் வேலனன் னாட்டிலுங்கன்
சித்தம் பயில்பதி சொல்லா திருக்குந்தெரிவையரே."
  • வடமராட்சி கட்டைவேலி நெல்லியடிப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக் கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்றம் - இலங்கையிலேயே இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்குமாக உழைக்கின்ற, செயற்படுகின்ற ஒரே பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் இதுவேயாகும். நூலக வசதி - ஒரு வருடத்தில் நூலகத்தில் அதிகமான புத்தகங்களை வாசிக்கின்றவர்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமும் உண்டு - நூல் வெளியீடு போன்ற பணிகளை இச்சங்கம் மாத்திரமே தொடர்ந்து செய்து வருகின்றது.
  • வடமராட்சி கரவெட்டி பகுதியிலை உள்ள சோனப்பு திடலில் அந்தக் காலத்தில் ஆண்டு தோறும் மாட்டுச் சவாரி நடக்கும்.
  • அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வளர்ந்த இடமான கரவெட்டி, இடதுசாரி சிந்தனைகளின் விதைநிலம். சமூக உட்கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மாக்சிசவாதிகள் நிறைந்த சிவப்பு மண் அது.
  • 1920, 30களில் 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது. உதாரணமாக, கரவெட்டியில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்)(குடியரசு கந்தப்பு ?) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார்.

[தொகு] இங்கு பிறந்த புகழ் பூத்தோர்

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கரவெட்டி&oldid=1096218" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி