உள்ளடக்கத்துக்குச் செல்

ரஞ்சகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஞ்சகுமார்
பிறப்புடிசம்பர் 17, 1959
கரவெட்டி
தேசியம்இலங்கை
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

ரஞ்சகுமார் (பிறப்பு - டிசம்பர் 17, 1959) இலங்கையின் முக்கியமான சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். 1978 அளவில் எழுதத் தொடங்கி அலை, புதுசு, திசை, சரிநிகர், வீரகேசரி, நந்தலாலா, ஞானம், உயிர் எழுத்து ஆகிய இதழ்களில் பல்வேறு புனைபெயர்களில் சிறுகதைகளையும் விமர்சனங்களையும் எழுதியுள்ளார். இவரது முதற் சிறுகதைத் தொகுதியான மோகவாசல் 1989 இல் வெளியானது. விமர்சனங்கள் இன்னும் தொகுக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம், கரவெட்டியில் பிறந்த ரஞ்சகுமார், புலம்பெயர்ந்து ஆத்திரேலியா, சிட்னி நகரில் வாழ்ந்து வருகிறார்.

பரிசுகள்

[தொகு]

சர்வதேச அளவில் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் ‘நவகண்டம்’ என்ற கதை முதற்பரிசு பெற்றிருக்கிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சகுமார்&oldid=4180098" இலிருந்து மீள்விக்கப்பட்டது