யோகா பாலச்சந்திரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யோகா பாலச்சந்திரன் ( பி. கரவெட்டி, யாழ்ப்பாணம்) ஈழத்துப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்து இதழ்களில் சிறுகதை, விமர்சனம், தொடர்கதை முதலியவற்றை எழுதியவர். புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கிறார். சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவின் " சருங்கலே" படத்தின் தமிழ் வசனங்களை எழுதியதோடு, அதன் படப்பிடிப்பு கரவெட்டியில் இடம்பெற காரணமாக இருந்தவர். இலங்கை குடும்பத் திட்டச் சங்கத்தின் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர். இவரது கணவரான கே. பாலச்சந்திரன் "ரைம்ஸ்" பத்திரிகையில் கடமையாற்றிய காலத்தில், கொழும்பு கலைச் சங்கத்தின் தலைவராக இருந்து ஏராளமான தமிழ் நாடகங்களை மேடையேற்றியதோடு, கலைஞர்களை கெளரவித்து ஆதரவு நல்கியவர்.
[தொகு] எழுதிய நூல்கள்
- மாவீரன் செண்பகராமன்

