ஜோன் ஆஃப் ஆர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோன் ஒஃப் ஆர்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனித ஜோன் ஆஃப் ஆர்க்

கற்பனை ஓவியம், ca. 1485. (Centre Historique des Archives Nationales, பாரீஸ், AE II 2490)
கன்னியர்
பிறப்பு ca. 1412 ஜனவரி 6[1]
டாம்ரேமி, பிரான்சு[2]
இறப்பு 30 மே 1431 (அகவை 19)
ரோவன், பிரான்சு
(அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது)
ஏற்கும் சபை/சமயம் உரோமன் கத்தோலிக்கம்
ஆங்கிலிக்க ஒன்றியம்
அருளாளர் பட்டம் பத்தாம் பயஸ்-ஆல் ஏப்ரல் 18, 1909, நோட்ரே டேம் டி பாரிஸ்
புனிதர் பட்டம் பதினைந்தாம் பெனடிக்ட்-ஆல் மே 16, 1920, உரோம்
திருவிழா மே 30
பாதுகாவல் பிரான்சு; இரத்த சாட்சிகள்; கைதிகள்; இராணுவத்தினர்; நம்பிக்கையினால் நிந்திக்கப்படுவோர்; பெண் இராணுவத்தினர்


ஜோன் ஆஃப் ஆர்க் (Saint Joan of Arc) கி.மு 1412 ஜனவரி 6 ஆம் தேதி பிரான்சு நாட்டில் உள்ள டாம்ரேமி என்ற இடத்தில் பிறந்தார் என நம்பபடுகிறது. இவர் பிரான்சு நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது தந்தை ஜாக்குஸ் டி ஆர்க் ஆவார். இவரது தாயார் இஸபெல்லா. இவர்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அதில் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் மூன்றாவது குழந்தை ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயி எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தனது குழந்தைபருவத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தன் தயாரிடம் இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கை உடையவர்களாக திகழ்ந்தனர். எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்களும் ஆழ்ந்த இறைசிந்தனையுடையவராகவே இருந்தார். அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதாக நம்பினார். பிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் பிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார்.[3] இவையே பிரான்சின் ஏழாம் சார்லஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது.

ஆயினும் பர்கண்டியர்களால் பிடிக்கப்பட்ட இவர், பிரான்சின் எதிரிகளாயிருந்த ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார். அவர்கள் பேயுவைஸின் ஆயர் பியேர் கெளசின் துணையோடு இவரை சூனியக்காரி எனவும் தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19 ஆம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப்பின் திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸிலால் இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான பணி துவங்கப்பட்டு, ஏப்ரல் 18, 1909 அன்று திருத்தந்தை பத்தாம் பயஸால், நோட்ரே டேம் டி பாரிஸ் கோவிலில் அருளாளர் பட்டமும், உரோமையில் மே 16, 1920, அன்று திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்டால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் விழா நாள் மே 30 ஆகும்.

படைத்தளபதியாக ஜோன் ஆஃப் ஆர்க்[தொகு]

பிரான்சில் இருந்த ஆங்கிலேயரை ஓர்லியன்சை விட்டு விரட்ட ஜோன் ஆஃப் ஆர்க் அவர்களின் மீது போர் தொடுத்தார். அவர் தளபதியாக பிரெஞ்ச் படையினரை வழிநடத்த பிரெஞ்சு படை பிரான்சின் சார்லசு மன்னர் ஆதரவுடன் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை கைப்பற்றினர். போரில் ஜோன் ஆஃப் ஆர்க் படுகாய முற்றார். இந்த வெற்றியால் ரைம்சு தேவாலயத்தில் ஜோன் ஆஃப் ஆர்க் முன்னிலையில் சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். இப்போரில் தோல்வியுற்றதால் ஆங்கிலக் படைத்தளபதிகளான ஜான் போயர், ஆயர் பீட்டர் கெளஸானும் ஜோன் ஆஃப் ஆர்க்கை பழிவாங்கத் திட்டமிட்டனர். ஜோன் ஆஃப் ஆர்க் பாரிசு நகரைப் பிடிக்க திட்டமிட்டார்.

இறப்பு[தொகு]

ஜோன் ஆஃப் ஆர்க்கின் மரணத்தை சித்தரிக்கும் ஓவியம். மேக்சிமம் இரியல் டென் சாரதி என்ற ஓவியரால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது வரையப்பட்டது.[4]

ஜோன் தன்னுடன் இருந்த சிறு படையுடனேயே போரிட்டு காம்பைஞ் மற்றும் சில தளங்களைப் பிடித்தார். பாரிசைத் தாக்கச் சென்ற ஜோன் ஆஃப் ஆர்க்கின் சிறுபடை சார்லசு மன்னரின் ஆதரவு இல்லாததால் பலம் குறைந்து தோல்வியுற்றுப் பின்வாங்கியது. காம்பைஞ் கோட்டைக்கு திரும்பும் போது ஜோன் ஆஃப் ஆர்க் பர்கண்டியர்களால் கடத்திசெல்லப்பட்டு சிறையிடப்பட்டாள். ஆங்கிலேயர்களிடம் பணம் பெற்று பர்கண்டியர்கள் ஜோன் ஆஃப் ஆர்க்கை அவர்களிடம் ஒப்படைத்னர்.[5] உரோவன் சிறையில் ஜோன் ஆஃப் ஆர்க் அடைக்கப்பட்டு, இறையியல் நீதிமன்றத்தில் திரிபுக்கொள்கையாளர் எனக்குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார். அதன்படி தனது பத்தொன்பதாவது வயதில் மே 30, 1431 அன்று ஜோன் ஆஃப் ஆர்க் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.[6]

ஊடகங்களில்[தொகு]

தி மெசன்சர் - தி சுடோரி ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க் (The Messenger - The Story of Joan of Arc) திரைப்படச் சுவரொட்டியில் ஜோன் ஆஃப் ஆர்காக மில்லா ஜோவோவிக்கு

ஜோன் ஆஃப் ஆர்க் பற்றிய வரலாற்றுத் திரைப்படம் தி மெசன்சர் - தி சுடோரி ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க் (The Messenger - The Story of Joan of Arc) என்ற பெயரில் 1999 ஆம் ஆண்டு வெளியானது. இதில் மில்லா ஜோவோவிக்கு ஜோன் ஆஃப் ஆர்க் பாத்திரத்தில் நடித்திருந்தார்.[7]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. (See Pernoud's Joan of Arc By Herself and Her Witnesses, p. 98: "Boulainvilliers tells of her birth in Domrémy, and it is he who gives us an exact date, which may be the true one, saying that she was born on the night of Epiphany, 6 January").
  2. "Chemainus Theatre Festival > The 2008 Season > Saint Joan > Joan of Arc Historical Timeline". Chemainustheatrefestival.ca. பார்த்த நாள் 2012-11-30.
  3. John Aberth. From the Brink of the Apocalypse,Routledge, 2000 ISBN 0-415-92715-3, ISBN 978-0-415-92715-4 p. 85
  4. The statue is the subject of a registration as a historic monument since 30 October 2002
  5. See Pernoud, p. 220, which quotes appellate testimony by Friar Martin Ladvenu and Friar Isambart de la Pierre.
  6. In February 2006 a team of forensic scientists announced the beginning of a six-month study to assess bone and skin remains from a museum at Chinon and reputed to be those of the heroine. The study cannot provide a positive identification but could rule out some types of hoax through carbon dating and gender determination.[1] (Retrieved 1 March 2006) An interim report released 17 December 2006 states that this is unlikely to have belonged to her.[2] . Retrieved 17 December 2006.
  7. http://www.imdb.com/media/rm3660486144/tt0151137?ref_=tt_ov_i
ஜோன் ஆஃப் ஆர்க் வாழ்க்கையின் காலக்கோடு
1412 —
1414 —
1416 —
1418 —
1420 —
1422 —
1424 —
1426 —
1428 —
1430 —
1432 —
1412 - பிறப்பு (ஏறத்தாழ)
1424 - இறைக் காட்சிள்
8 மே 1429 - ஒர்லயன்சு நகரின் முற்றுகையை நீக்கல்
30 மே 1431 - உயிருடன் தீயிடப்பட்டுக் கொல்லப்படல்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_ஆஃப்_ஆர்க்&oldid=1668396" இருந்து மீள்விக்கப்பட்டது