முரசொலி மாறன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முரசொலி மாறன் | |
![]() |
|
| அரசியல் கட்சி | திமுக |
|---|---|
|
|
|
| பிறப்பு | ஆகத்து 17, 1934 திருக்குவளை, தமிழ்நாடு |
| இறப்பு | நவம்பர் 23 2003 (அகவை 69) சென்னை |
| வாழ்க்கைத் துணை |
மல்லிகா மாறன் |
| பிள்ளைகள் | 2 மகன், 1 மகள் |
| இருப்பிடம் | சென்னை |
| நவம்பர் 23 இன் படியான தகவல், 2003 மூலம்: [1] |
|
முரசொலி மாறன் (ஆகஸ்ட் 17, 1934-நவம்பர் 23, 2003) தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி. முரசொலி வார/நாளேட்டின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை நடுவண் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (GATT) இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பாராட்டுக்கள் பெற்றவர். இவர் ஒரு செய்தியாளராகவும் திரைப்பட எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.
தி. மு. க தலைவர் கருணாநிதி இவரின் தாய் மாமன் ஆவார். இவரின் இரண்டு மகன்களில் ஒருவர், தயாநிதி, ஜவுளித் துறையின் நடுவண் அமைச்சர் ஆவார். கலாநிதி சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர்; இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 20ஆம் நிலையில் உள்ளார்.
