பார்செலோனா
| பார்செலோனா Barcelona |
|||
|---|---|---|---|
| வானத்திலிருந்து பார்செலோனா | |||
|
|||
| அமைவு: | |||
| நாடு | |||
| தனியாட்சிப் பகுதி | கடலோனியா | ||
| மாகாணம் | பார்செலோனா | ||
| கொமார்க்கா | பார்செலோனெஸ் | ||
| தோற்றம் | கி.மு. 3ம் நூற்றாண்டு | ||
| அரசு | |||
| - மாநகரத் தலைவர் | யொர்டி ஹெரெயு இ பொஹேர் | ||
| பரப்பளவு | |||
| - நிலம் | 101.4 கிமீ² (39.2 ச. மைல்) | ||
| ஏற்றம் | 12 மீ (39 அடி) | ||
| நேர வலயம் | நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+2) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | +34 (எசுப்பானியா) +93 (பார்செலோனா) | ||
| இணையத்தளம்: www.bcn.cat | |||
பார்செலோனா (அல்லது பார்சிலோனா) (Barcelona) எசுப்பானியா நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். காட்டலோனியா பகுதியின் தலைநகரம் ஆகும். இந்நகரின் மக்கள் தொகை 2009 கணக்கெடுப்பின் படி 1,621,537 ஆகும்; இது பார்சிலோனா நிர்வாகப் பகுதிக்குள் வாழும் மக்கள்தொகையாகும், அதாவது 101.4 கிமீ² பரப்பில் வாழ்வோரின் மக்கள்தொகை. புறநகர்ப் பகுதியில், இது 803 கிமீ² வரை விரிகிறது, தோராயமாக 4.2லிருந்து 4.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பாரீசு, இலண்டன், தி ரூர், மிலான் ஆகிய நகர்களுக்கடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிக புறநகர் மக்கட்தொகை கொண்ட (ஆறாவது இடத்தில்) நகராகத் திகழ்கிறது. மெடிட்டரேனியன் கடற்கரையில் இருக்கும் பெருநகர்களிலேயே இதுவே மிகப்பெரிய நகரமாகும். இந்நகரம் யோப்ரிகாட் மற்றும் பீசோசு நதிகளின் முகவாய்ப்பகுதிகளின் இடையே அமைந்துள்ளது. இதன் மேற்கு எல்லையாக செல்லா டி கோல்செரோலா மலைமுகடு (512 மீ/1680 அடி) அமைந்துள்ளது.
ரோமானியப் பேரரசின் நகரமாகத் தோற்றுவிக்கப்பட்ட பார்செலோனா, விரைவில் பார்செலோனா மாவட்டத்தின் தலைநகராக மாறியது. அரகான் அரசாட்சியின் ஆளுகைக்குட்பட்ட பின்னர், அரகான் பேரரசின் மிக முக்கியமான நகரமாக பார்செலோனா உருப்பெற்றது. வரலாற்றில் பலமுறை முற்றுகையிடப்பட்டு சிதைக்கப்பட்ட இந்நகரம், தற்போது செழுமையான பாரம்பரிய சின்னமாகத் திகழ்கிறது. இக்காலத்தில், மிக முக்கியமான கலாச்சார நடுவமாகவும் அதிகம் வெளிநாட்டுப் பயணிகள் வருகைதரும் இடமாகவும் இந்நகரம் இருக்கிறது. 1992இல் இந்நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. மேலும் பல முக்கியமான உலகத்தரத்திலான மாநாடுகளும் கலந்தாய்வுகளும், முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
உலகப் பாரம்பரியக் களங்கள் [தொகு]
ஐநாவின் யுனெஸ்கோ நிறுவனத்தாரால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்கள் (பார்செலோனாவில் இருப்பவை) பின்வருமாறு:[1]
| குறியெண் | பெயர் | வருடம் | ஆயத்தொலைகள் | படிமம் |
|---|---|---|---|---|
| 320-001 | Park Güell | 1984 | ||
| 320-002 | Palau Güell | 1984 | ||
| 320-003 | Casa Milà | 1984 | ||
| 320-004 | Casa Vicens | 2005 | ||
| 320-005 | Façade of the Nativity and crypt of the Sagrada Familia | 2005 | ||
| 320-006 | Casa Batlló | 2005 | ||
| 804-001 | Palau de la Música Catalana | 1997 | ||
| 804-002 | Hospital de Sant Pau | 1997 |
உசாத்துணைகள் [தொகு]
- ↑ The seventh element of Place World Heritage "Works of Antoni Gaudí" is the Crypt in Colònia Güell, which is located at Santa Coloma de Cervelló.