1783
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1750கள் 1760கள் 1770கள் - 1780கள் - 1790கள் 1800கள் 1810கள் |
| ஆண்டுகள்: | 1780 1781 1782 - 1783 - 1784 1785 1786 |
| 1783 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1783 MDCCLXXXIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1814 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2536 |
| சீன நாட்காட்டி | 4479-4480 |
| எபிரேய நாட்காட்டி | 5542-5543 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1838-1839 1705-1706 4884-4885 |
| இரானிய நாட்காட்டி | 1161-1162 |
| இசுலாமிய நாட்காட்டி | 1197 – 1198 |
| ரூனிக் நாட்காட்டி | 2033
|
ஜூன்: பிரெஞ்சு வெப்ப வளிக்குண்டு மொண்ட்கோல்ஃபியர்.
1783 (MDCCLXXXIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 3 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியா ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை அங்கீகரித்தது.
- பெப்ரவரி 4 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மீதான தனது தாக்குதல்களை நிறுத்துவதாக பிரித்தானியா அதிகாரபூர்வமாக அறிவித்தது.
- பெப்ரவரி 4 - இத்தாலியில் கலபிறியா என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் 50,000 பேரைக் கொன்றது.
- ஜூன் 4 அல்லது ஜூன் 5 - பிரான்ச்சில் மொண்ட்கோல்ஃபியர் சகோதரர்கள் தமது வெப்ப வளிக்குண்டை (hot-air balloon) சோதித்தனர்.
- ஜூன் 8 - ஐஸ்லாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- ஆகஸ்ட் 5 - ஜப்பானில் அசாமா மலை தீக்கக்கியதில் 35,000 ப்பேர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 3 - அமெரிக்கப் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஐக்கிய அமெரிக்காவுக்கும்பிரித்தானியாவுக்கும் இடையில் பாரிசில் உடன்பாடு எட்டப்பட்டது.
- நவம்பர் 25 - அமெரிக்கப் புரட்சிப் போர்: கடசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டு வெளியேறினர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- திருகோணமலை கோட்டை பிரெஞ்சுக்களிடம் இருந்து பிரித்தானியரிடம் கைமாறி பின்னர் ஒல்லாந்தரிடம் மீண்டும் கைமாறியது.
- புனித டேவிட் கோட்டை பிரித்தானியரின் தாக்குதலுக்குள்ளானது.
பிறப்புக்கள் [தொகு]
- பிரெட்ரிக் புரோபல், "குழந்தைப் பூங்கா" முறைமையை முன்மொழிந்தவர் (இ. 1852)
- ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி, இலங்கை அரசியல்வாதி
இறப்புக்கள் [தொகு]
- செப்டம்பர் 18 - லியோனார்டு ஆய்லர், கணிதவியல் அறிஞர் (பி. 1707)