எடி மாபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எடி மாபோ
பிறப்பு எடி கொய்கி சாம்போ
ஜூன் 29, 1936(1936-06-29)
மறி, டொரெஸ் நீரிணைத் தீவுகள், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா
இறப்பு ஜனவரி 21, 1992 (அகவை 55)
பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா.

எடி கொய்க்கி மாபோ (Eddie Koiki Mabo, கி. 29 சூன் 1936 – 21 சனவரி 1992[1]) ஒரு டொரெஸ் நீரிணைத் தீவுகளைச் சார்ந்த ஆஸ்திரேலியர். இவர் ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமைகளை மீட்டுக்கொடுக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக அறியப்படுகிறார். மேலும் இவர் வரலாற்றுப்பூர்வமான உயர்நீதிமன்ற வழக்காகிய "மாபோ எதிர் குயின்ஸ்லாந்து" வழியாகவும் அறியப்படுகிறார்.

இப்புகழ் பெற்ற வழக்கின் தீர்ப்பை அடுத்து 1788 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வந்த terra nullius (வெற்று நிலம் - எவருக்கும் சொந்தமில்லாத நிலம்) என்ற கொள்கை இல்லாமல் செய்யப்பட்டு, தலைமுறைகளாக நிலம் வைத்திருந்த (native title) ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமை வழங்கப்பட்டது.

மாபோவின் இயற்பெயர் "எடி கொய்கி சாம்போ"[2]. அவரின் உறவின் பென்னி மாபோ தத்தெடுத்த பிறகு, தன் கடைசிப் பெயரை மாபோ என்று மாற்றிக்கொண்டார்.[3] இவர் டொரெஸ் நீரிணைத் தீவுகளில் ஒன்றான மறி தீவில் பிறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=எடி_மாபோ&oldid=1455467" இருந்து மீள்விக்கப்பட்டது