மைசூர் அரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மைசூர் பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
|
|||||||||||||||||||||||||||||||||||
மைசூர் அரசு (Kingdom of Mysore, கன்னடம்: ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ ) (1399–1947) தென்னிந்தியாவில் 1399 இல் மைசூர் மாநகரில் Yaduraya என்பவரால் அமைக்கப்பட்ட பேரரசாகும். இது ஆரம்பத்தில் வொடையார் குடும்பத்தினரால் விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக 1565 வரை விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. நரசராஜ வொடையார் மற்றும் சிக்க தேவராய வொடையார் ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.