திப்பு சுல்தான்
| திப்பு சுல்தான் Tippu Sultan |
|
| மைசூர் மன்னன் | |
|---|---|
| ஆட்சிக்காலம் | 1782 - 1799 |
| பிறப்பு | நவம்பர் 20, 1750 |
| பிறப்பிடம் | தேவனாகள்ளி |
| இறப்பு | மே 4, 1799 |
| இறந்த இடம் | ஸ்ரீரங்கப்பட்டணம் |
| முன்னிருந்தவர் | ஹைதர் அலி |
| தந்தை | ஹைதர் அலி |
| தாய் | பாக்ர்-உன்-நிசா |
| தமிழக இசுலாமிய ஆட்சியாளர்கள் | |
|---|---|
| பாண்டிய சுல்தான்கள் | |
| சையித் இப்ராகிம் | கி.பி. 1142 - 1207 |
| செய்யிது சமாலுதீன் | கி.பி. 1293 -1306 |
| தில்லி சுல்தானகம் | |
| முகமது பின் துக்ளக் | கி.பி. 1323-1335 |
| மதுரை சுல்தான்கள் | |
| ஜமாலுத்தீன் ஹஸன்ஷா | |
| அல்லாவுடீன் உடான்றி | |
| குட்புதீன் | |
| நாசிருதீன் | |
| அடில்ஷா | |
| பஃருடீன் முபாரக் ஷா | |
| அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா | |
| ஆற்காடு நவாப்புகள் | |
| நவாப் சுல்பிகர் அலி கான் | கி.பி. 1692 - 1703 |
| நவாப் தாவுத் கான் | கி.பி. 1703 - 1710 |
| நவாப் முகம்மது சதாத்துல்லா கான் I | கி.பி. 1710 - 1732 |
| நவாப் தோஸ்த் அலி கான் | கி.பி. 1732 - 1740 |
| நவாப் ஸஃப்தார் அலி கான் | கி.பி. 1740 - 1742 |
| நவாப் முகம்மது சதாத்துல்லா கான் II | கி.பி. 1742 - 1744 |
| நவாப் அன்வர்தீன் முகம்மது கான் | கி.பி. 1744 - 1749 |
| நவாப் சந்தா சாகிப் | கி.பி. 1749 - 1752 |
| நவாப் முகம்மது அலி கான் வாலாஜா | கி.பி. 1749 - 1795 |
| நவாப் உத்தாத் உல் உம்ரா | கி.பி. 1795 - 1801 |
| நவாப் ஆசிமுத்துல்லா | கி.பி. 1801 - 1819 |
| நவாப் ஆசம் ஜா | கி.பி. 1819 - 1825 |
| நவாப் குலாம் முகம்மது கவுஸ் கான் | கி.பி. 1825 - 1855 |
| மற்றவர்கள் | |
| முகம்மது யூசுப்கான் | கி.பி. 1759 - 1764 |
| திப்பு சுல்தான் | கி.பி. 1782- 1799 |
| edit | |
திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தினில் போரின் போது இறந்தார்.
[தொகு] சமூக சீர்திருத்தம்
- உயர்ஜாதித் தீண்டாமை மற்றும் அடக்குமுறைக்கு எதிரானத் திப்புவின் சமூக சீர்த்திருத்தம்.
- கேரள பெண்சமூகத்தில் திப்பு சுல்தான் நடைமுறைப் படுத்திய மற்றொரு சீர்திருத்தம் பெண்களின் மேலாடை.
இடுப்புக்கு மேல் உடம்பை மறைக்காத பெண்களின் நடைமுறை, சாதாரண வாழ்க்கையை மிக அலோங்கலப்படுத்தும் என்றும் மக்களின் முன்னேற்றத்துக்கு அது பெரிய தடையாக இருக்கும் என்றும் திப்பு புரிந்து கொண்டார்.
அதன் காரணமாக, இத்தகைய ஜாதி சம்பிரதாயத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும்எல்லாப் பெண்களும் கட்டாயமாக தங்களின் மார்புகளை மறைக்க வேண்டும் என்றும் திப்பு சுல்தான் கண்டிப்பாக உத்தரவிட்டார்.