கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர் உழவு
| சோழவந்தான் அருகே நெல்வயலில் மாடுபூட்டி ஏர் உழவு செய்யும் காட்சி |
|
|
உழவர் அல்லது விவசாயி (farmer) என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது.[1] சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது.ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது.இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின.உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப் படுத்தி யுள்ளது. தவிர வருமான வரி விலக்கு,உர மானியம்,உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப் படுகிறது.இருப்பினும் விவசாயக் கடன் இன்னும் சிறுகடன் கொடுக்கும் தனிநபர் ஆதிக்கத்தில் இருப்பதால் கடன்சுமையால் பல உழவர்கள் தம்முயிர் துறப்பதும் தீரவில்லை.[2][3]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ சுழன்றும் ஏர் பின்னது உலகு
- ↑ விவசாயிகளின் உடனடி தேவை- நவீன உழவர் சந்தை
- ↑ ஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ?
இதனையும் காண்க [தொகு]