சோழவந்தான்
| சோழவந்தான் | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | மதுரை |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| சட்டமன்றத் தொகுதி | சோழவந்தான் |
| சட்டமன்ற உறுப்பினர் |
எம். வி. கருப்பையா (அதிமுக) |
| மக்கள் தொகை | 21,661 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 127 மீட்டர்கள்s (417 அடி) |
|
குறியீடுகள்
|
|
சோழவந்தான் (Cholavandan), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. வெற்றிலை, நெல், வாழை, தென்னை, கரும்பு முதலியன இங்கு பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன.
பொருளடக்கம் |
பெயர் வரலாறு [தொகு]
இந்த ஊர் சனகபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலும் சனகை மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பாண்டிய நாட்டில் இருந்த இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட தஞ்சை நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்கிறது என வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சோழன் உவந்தான் என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர்.
புவியியல் [தொகு]
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 மீட்டர் (419 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,661 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சோழவந்தான் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சோழவந்தான் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "Cholavandan". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் பெப்ரவரி 6, 2007.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
|
||||||||||||||||||||||||||||||||||