மதுரை முக்தீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோயில்
பெயர்
பெயர்:மதுரை ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:ஐராவதநல்லூர்
மாவட்டம்:மதுரை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:முக்தீஸ்வரர்
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:தெப்பக்குளம்

மதுரை ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோயில், மதுரை நகரில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

இறைவன்[தொகு]

கருவறையில் உள்ள இறைவன் முக்தீஸ்வரர் ஆவார். விநாயகர், முருகன், சந்திரன், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். அம்மன் சன்னதி தனியாக உள்ளது.

அமைப்பு[தொகு]

பலி பீடம், ரிஷபக்கொட்டில், கொடி மரம் ஆகியவை கோயிலில் காணப்படுகின்றன. முன் மண்டபத்தைத் தொடர்ந்து உள் மண்டபம், கருவறை ஆகியவை காணப்படுகின்றன. கருவறைக் கோஷ்டத்தில் முறையே தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், துர்க்காம்பிகை ஆகியோர் காணப்படுகின்றனர்.

ஓவியங்கள்[தொகு]

மதுரைத் திருவிளையாடல்கள் 64இல் இக்கோயில் அமையக் காரணமாக இருந்த ஐராவதம் சாபம் தீர்த்தது, இந்திரன் சாபம் தீர்த்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள் ஓவியங்களாகக் காணப்படுகின்றன.

படத்தொகுப்பு[தொகு]

ஆதாரங்கள்[தொகு]


வெளியிணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Muktisvarar Temple, Madurai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.