மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
| மதுரை காமராசர் பல்கலைக்கழகம் | |
|---|---|
| காமராசர் பல்கலைக்கழகம் | |
| வகை | அரசு நிறுவனம் |
| வேந்தர் | கொனியேட்டி ரோசையா |
| அமைவிடம் | மதுரை, தமிழ் நாடு, இந்தியா |
| வளாகம் | நகரம் சார் பகுதி |
| சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் இந்தியாவின் தென் தமிழ்நாடில் மதுரையில் அமைந்துள்ளது. இது 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது 18 பாடசாலைகளையும் 72 திணைக்களங்களையும் கொண்டுள்ளது. இப் பல்கலைக் கழகமானது 109 இணைக்கப் பட்ட கல்லூரிகளையும் (9 தனித்தியங்கும்) உடன் அனுமதிபெற்ற 7 மாலைக் கல்லூரிகளையும் கொண்டுள்ளது. தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் கல்யாணி மதிவாணன் உள்ளார். இவர் இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துனணைவேந்தர் ஆவார். பல்கலைக்கழக நிதிநல்கை குழுவினால் வழங்கப்படும் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான தகுதியை பெற்றுள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (மதுரை பல்கலைக் கழகம் ஆரம்பத்திலிருந்து அறியப் படுகின்றது) இந்தியாவில் சரித்திர முக்கியத்துவமான நகரமான மதுரையில் பண்டைய பாண்டிய அரசரினின் தலைநகரில் அமைந்துள்ளது. 1978இல் மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் காமராசர் நினைவாக நினைவாக இப்பல்கலைக் கழகமானது மதுரை காமராசர் பல்கலைக் கழகமாகப் பெயர் மாற்றப்பட்டது.
பொருளடக்கம் |
துணைவேந்தர்கள் [தொகு]
|
முனைவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (1969-1971)[1]
|
முனைவர் மு.வரதராசன் (1971-10.10.1974) [2]
|
முனைவர் வா.செ.குழந்தைசாமி (1978-1979)[3]
|
|
|
முனைவர் வ.சுப.மாணிக்கம் (17.8.1979-30.6.1982)[4]]
|
பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமி [5] 1985-20.11.1988 |
முனைவர் எம்.இலட்சுமணன் (1988-1991)[6]
|
முனைவர் எம்.டி.கே.குத்தாலிங்கம்[7]1992-1995 |
|
பேராசிரியர் கு. ஆளுடையபிள்ளை, இ.ஆ.ப. (1995-1998)[7]
|
பேராசிரியர் எம். சாலிகு (1998-2011)[7] |
முனைவர் பி.கே.பொன்னுசாமி (2002-2005)[7]
|
முனைவர் பி. மருதமுத்து(மார்ச் 2005-2008)[7]
|
|
முனைவர் இரா.கற்பககுமரவேல் (ஏப்ரல் 2008-19.4. 2011)[8]
|
முனைவர் கல்யாணி மதிவாணன் (10.4.2002 - )[7]
|
வழங்கப்படும் படிப்புகள் [தொகு]
முதுநிலை படிப்புகள் [தொகு]
- முதுகலை தமிழ்
- முதுகலை ஆங்கிலம்
- முதுகலை வரலாறு
- முதுநிலை அறிவியல் (கணிதம்)
- முதுநிலை அறிவியல் (இயற்பியல்)
- முதுநிலை அறிவியல் (உயிர்-வேதியியல்)
- முதுநிலை அறிவியல் (மூலக்கூறு உயிரியல்)
இளநிலை ஆய்வாளர் [தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- கணிதம்
முதுநிலை ஆய்வாளர் [தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- பயிரியல்
- விலங்கியல்
- உயிர்-வேதியியல்
- மூலக்கூறு உயிரியல்
இதன் திறந்த பாடக் கற்கைநெறிகளை இலங்கையில் கொழும்பில் அம்பிகா கல்வி நிலையமூடாக செப்டம்பர் 6 2000 முதல் வெளிவாரிக் கற்கை நெறிகளை வழங்கி வருகின்றனர். சில நிலையங்களில் ஆய்வுகளையும் ஆசிரியர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக உள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://tamilelibrary.org/teli/tpmeena.html.
- ↑ http://en.wikipedia.org/wiki/Mu._Varadarajan.
- ↑ http://www.tamilvu.org/coresite/html/cwchreng.htm.
- ↑ இலக்கியச்சாறு, வ.சுப.மா. வாழ்க்கைக்குறிப்பு, மணிவாசகர் பதிப்பகம்,சென்னை 2001.
- ↑ www.ias.ac.in/jarch/currsci/58/00001161.pdf.
- ↑ http://www.cedtn.org/trustboard1.html.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 http://www.thehindu.com/news/cities/Madurai/article3306605.ece.
- ↑ http://www.mkuniversity.org/menu_pg.php?id=58?s_id=72.
வெளி இணைப்புகள் [தொகு]
- மதுரை காமராசர் பல்கலைக் கழகம் - உத்தியோகபூர்வ இணையத்தளம் அணுகப்பட்டது நவம்பர் 26, 2006. (ஆங்கிலத்தில்)
- மதுரை காமராசர் தொலைக்கல்வி நிலையம் - அதிகாரப்பூர்வ இணையத்தளம், அணுகப்பட்டது ஆகஸ்டு 25, 2007 (ஆங்கிலத்தில்)
- School of Biological Sciences
