அழகர் மலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகர் மலை மதுரையின் வடக்கே 19 கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு மலையாகும். இதுவொரு அடர்ந்த காடுகள் சூழ்ந்த உயிரியற் பல்வகைமை கொண்டது. பல அறியவகை மூலிகை மரங்களும், நீர்வூற்றுக்களும் உள்ளன.[1] சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி.
பொருளடக்கம் |
மலையின் பெயர்கள் [தொகு]
- திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை = கேழ் இருங்குன்று (அழகர் மலை)