மதுரை மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ் நாடு
மதுரை மாநகராட்சி
Tnஅரசுஊராட்சிt-logo.jpg

இக்கட்டுரை
தமிழக உள்ளாட்சி அமைப்புகள்
என்ற தொடரில் ஒரு பகுதி

Mdu Corporation logo.jpg

ஏனைய மாவட்ட்ங்கள் · அரசியல் நுழைவு
தமிழக உள்ளாட்சி நுழைவு

இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான மதுரை மாவட்டத்தின் தலைநகராக உள்ள மதுரை உள்ளாட்சி அமைப்பில் ஒரு மாநகராட்சியாகும். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை 1971 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியிலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது மொத்தம் 13 பஞ்சாயத்து பகுதிகளைச் சேர்ந்து மதுரை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. வைகை ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நகரமாகும். தமிழ் மொழியின் பிறப்பிடமாக மதுரை கூறப்படுகின்றது. தென்னிந்திய திருத்தலங்களின் நுழைவு வாயிலாகவும், உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ள இடமாக மதுரை விளங்குகின்றது.

மதுரை மாநகராட்சி வரலாறு[தொகு]

  • 1866: மதுரை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு. அப்போதைய மக்கள் தொகை 41,601. நகரின் பரப்பளவு 2.60 சதுர கிலோமீட்டர்.
  • 1882: நகராட்சியில் புதிதாக ஆணையாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. முதலாவது ஆணையாளர் அதே ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி பதவியேற்றார்.
  • 1885: ஆணையாளர் பதவி நகர்மன்ற உறுப்பினர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பல நகர்மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். ஆணையாளர்களின் தலைவர் பதவி நகர்மன்றத் தலைவர் என்று மாற்றப்பட்டது. முதலாவது நகர்மன்றத் தலைவராக ராவ் பகதூர் ராமசுப்பய்யர் என்பவர் பதவியேற்றார்.
  • 1892: நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் 6 பேரை அரசே நியமிக்கும்.
  • 1921: நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்த்தப்பட்டது.
  • 1931: அரசியல் காரணங்களுக்காக நகராட்சிக் குழு (நகர் மன்றம்) கலைக்கப்பட்டது. மாவட்ட உதவி ஆட்சியாளர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
  • 1933: மீண்டும் அதே நகராட்சிக் குழு (நகர் மன்றம்) செயல்பட அரசு அனுமதித்தது.
  • 1942: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரித்ததற்காக நகராட்சிக் குழு (மன்றம்) மீண்டும் கலைக்கப்பட்டது.
  • 1943: நகராட்சிக் குழு (மன்றம்) முழுவதும் மாற்றியமைக்கப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அரசே நியமிக்கும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.
  • 1948: சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக நகராட்சிக் குழு (நகர் மன்றம்)வுக்குத் தேர்தல் நடந்தது. ஜனவரி மாதம் 3-ம் தேதி முதல் இந்த தேர்ந்தெடுக்கப்பட் நகராட்சிக் குழு (நகர் மன்றம்) செயல்படத் துவங்கியது. நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் 1969 வரை செயல்பட்டனர்.
மதுரை மாநகராட்சி கட்டிடம்
  • 1969: நகராட்சிக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 48 நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் பெண்கள், மூன்று பேர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.
  • 1971: மதுரை நகராட்சி, மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது.நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாநகராட்சியின் முதல் மாமன்றத் தலைவராக (மேயர்) எஸ்.முத்து தேர்வு செய்யப்பட்டார். பி.ஆனந்தம் மாமன்றத் துணைத் தலைவராக (துணை மேயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1974: மேலும் 13 பஞ்சாயத்துக்கள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. நகரிலுள்ள வார்டுகள் 65 ஆக மாற்றம் செய்யப்பட்டன.
  • 1978: மாநகராட்சிக்கு முதல் முறையாக தேர்தல் நடந்தது. 65 நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் பெண்கள், 4 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
  • 1991: வார்டு சீரமைப்பு கமிட்டியின் பரிந்துரைகளின்படி மதுரை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 72 ஆக மாற்றப்பட்டது.
  • 1996: மதுரை மாநகராட்சிக்கு இரண்டாவது முறையாக தேர்தல் நடந்தது. மாமன்றத் தலைவராக ப.குழந்தைவேலு (தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். மாமன்றத் துணைத் தலைவராக (துணை மேயர்) மிசா.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
  • 2001: மதுரை மாநகராட்சிக்கு மூன்றாவது முறையாக தேர்தல் நடந்தது. மாமன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த செ.ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2006: மதுரை மாநகராட்சிக்கு நான்காவது முறையாக தேர்தல் நடந்தது. மாமன்றத் தலைவராக தேன்மொழி கோபிநாதன் (தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார். மாமன்றத் துணைத் தலைவராக (துணை மேயர்) பி.எம்.மன்னன் தேர்வு செய்யப்பட்டார்.
  • 2011: மதுரை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்தின் காரணமாக 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள்,11 கிராம பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு வார்டுகள் எண்ணிக்கை 100ஆக மாற்றம் செய்யப்பட்டன.
  • 2011: மதுரை மாநகராட்சிக்கு ஐந்தாவது முறையாக தேர்தல் நடந்தது. மாமன்றத் தலைவராக திரு.வி.வி.ராஜன் செல்லப்பா (அ.தி.மு.க) தேர்ந்தெடுக்கப்பட்டார்.மாமன்றத் துணைத் தலைவராக (துணை மேயர்) எஸ்.கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

மாநகராட்சி அமைப்பு[தொகு]

மதுரை மாநகராட்சி இரண்டு மாவட்டப் பிரிவுகளாக செயல்படுகின்றது. ஒன்று தீர்மானித்து ஆய்ந்து செயல் படுகின்ற பிரிவு (ஆய்வுக் குழு) இன்னொன்று செயலாட்சி புரிகின்ற பிரிவு என இரு பிரிவுகளாக பிரிந்து செயல்படுகின்றன. செயலாட்சியர் பிரிவில் நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சித் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் இதில் அடங்குவர்.

மதுரை மாநகராட்சியைப் பற்றியத் தகவல்கள்
பரப்பளவு
147.97 ச.கிமீ
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி 14,62,240
மண்டலங்கள்
மண்டலம் 1 மண்டலம் 2 மண்டலம் 3 மண்டலம் 4
வட்டங்கள்
100
இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள்
கணக்குக் குழு
கல்விக்குழு
சுகாதாரக் குழு
வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு
நகரமைப்புக் குழு
வேலைக் குழு
தற்பொழுதைய மதுரை மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்
ஆணையர் துணை ஆணையர் மாமன்றத் தலைவர் (மேயர்) மாமன்றத் துணைத் தலைவர் (துணை மேயர்) மண்டலத் தலைவர்கள் மாநகராட்சி உறுப்பினர்கள்
இரா.நந்தகோபால் இ.ஆ.ப. கே.சாம்பவி வி.வி.ராஜன் செல்லப்பா எஸ். கோபால கிருஷ்ணன் 4 100 உறுப்பினர்கள்

வெளி இணைப்புக்கள்[தொகு]

மதுரை மாநகராட்சி அதிகாரப்பூர்வ இணையம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_மாநகராட்சி&oldid=1352852" இருந்து மீள்விக்கப்பட்டது