ஏ. பி. நாகராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன் (Akkamappettai Paramasivam Nagarajan), சுருக்கமாக ஏபிஎன் 1960களில் தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மையான இயக்குனர்களில் ஒருவராக விளங்கியவர்.

வாழ்க்கை [தொகு]

ஏ. பி. நாகராஜன் ஓர் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தனது ஏழாவது அகவையிலேயே டிகேஎஸ் சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் ஒலிப்பு என்பனவற்றில் பயிற்சி பெற்றார். அக்குழுவில் பல சிறப்பான வேடங்களில் நடித்து வந்தார். ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தில் ஈடுபாடு உடையவராக இருந்தார்.

1953ஆம் ஆண்டில் அவரது நாடகம் "நால்வர்" திரைப்படமாக்கப்பட்டபோது அதில் நடித்ததுடன் திரைக்கதை வசனத்தையும் எழுதினார். இதுவே அவரது திரைப்பட நுழைவாக அமைந்தது. தொடர்ந்து மாங்கல்யம் (1954), பெண்ணரசி (1955), ஆசை அண்ணா அருமைத் தம்பி (1955), டவுன் பஸ் (1955) மற்றும் நல்ல தங்கை (1955) ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார். கடைசி இரண்டைத் தவிர இத்திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார். 1955ஆம் ஆண்டின் நம் குழந்தை மற்றும் நல்ல தங்காள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1956இல் சிவாஜி கணேசன் நடித்த நான் பெற்ற செல்வம் திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியபோது அவருடன் அறிமுகமானார்.

1957ஆம் ஆண்டில் நடிகர் வி. கே. ராமசாமியுடன் இணைந்து ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ் என்ற பெயரில் மக்களைப் பெற்ற மகராசி , நல்ல இடத்துச் சம்பந்தம் ஆகிய திரைப்படங்களை தயாரித்தார். துவக்கத்தில் தற்கால சம்பவங்களையொட்டி இயக்கிய நாகராஜன் 1960களின் இடையில் சமய நூல்களை ஒட்டி "சரஸ்வதி சபதம்", "திருவிளையாடல்", கந்தன் கருணை", திருமால் பெருமை" போன்ற திரைபடங்களை இயக்கினார்.

இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக திருவிளையாடல்_(திரைப்படம்), தில்லானா மோகனாம்பாள், நவராத்திரி மற்றும் இராஜராஜ சோழன் ஆகியன உள்ளன.


திரைப்பட வரலாறு

  1. நவரத்தினம் (1977)
  2. ஸ்ரீ கிருஷ்ணா லீலா (1977)
  3. ஜெய் பாலாஜி (1976)
  4. மேல் நாட்டு மருமகள் (1975)
  5. குமாஸ்தாவின் மகள் (1974)
  6. காரைக்கால் அம்மையார் (1973)
  7. இராசராசன் சோழன் (1973)
  8. திருமலை தெய்வம் (1973)
  9. அகத்தியர் (1972)
  10. திருப்பதி கன்னியாகுமாரி யாத்ரா (1972)
  11. கண்காட்சி (1971)
  12. பாலராஜு கதா (1970)
  13. திருமலை தென்குமரி (1970)
  14. விளையாட்டுப் பிள்ளை (1970)
  15. குருதட்சணை (1969)
  16. வா ராஜா வா (1969)
  17. தில்லானா மோகனாம்பாள் (1968)
  18. திருமால் பெருமை (1968)
  19. கந்தன் கருணை (1967)
  20. சீதை (1967)
  21. திருவருட்செல்வர் (1967)
  22. சரஸ்வதி சபதம் (1966)
  23. திருவிளையாடல்_(திரைப்படம்) (1965)
  24. நவராத்திரி (1964)
  25. [குலமகள் ராதை]] (1963)
  26. வடிவுக்கு வளைகாப்பு (1962)


விருதுகள்

  1. திருவிளையாடல்_(திரைப்படம்) (1965) - சிறந்த_தமிழ்த்_திரைப்படத்துக்கான_தேசிய_விருது
  2. தில்லானா மோகனாம்பாள் (1968) - சிறந்த_தமிழ்த்_திரைப்படத்துக்கான_தேசிய_விருது

வெளியிணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பி._நாகராசன்&oldid=1414739" இருந்து மீள்விக்கப்பட்டது