ஜேம்ஸ் ஜோய்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜேம்ஸ் ஜோய்ஸ்

James Joyce, ca. 1918
பிறப்பு ஜேம்ஸ் அகஸ்டீன் அலோசியஸ் ஜோய்ஸ்
பெப்ரவரி 2, 1882(1882-02-02)
ரத்கர், டப்ளின், அயர்லாந்து
இறப்பு ஜனவரி 13, 1941 (அகவை 58)
சூரிச், சுவிட்சர்லாந்து
தொழில் புதின எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர்
இயக்கம் நவீனத்துவம், imagism
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
டப்ளினர்ஸ் (1914), A Portrait of the Artist as a Young Man (1916), உலிசெஸ் (1922), பினகன்ஸ் வேக் (1939)
துணைவர்(கள்) நோரா பர்னக்கிள்
(1931-1941)

ஜேம்ஸ் அகஸ்டீன் அலோசியஸ் ஜோய்ஸ் (James Joyce) என்னும் முழுப்பெயர் கொண்ட ஜேம்ஸ் ஜோய்ஸ் அல்லது ஜேம்ஸ் ஜாய்ஸ் (2 பெப்ரவரி 1882 – 13 ஜனவரி 1941), ஒரு புலம்பெயர்ந்த ஐரிய எழுத்தாளர் ஆவார். இவர் 20 ஆம் நூற்றாண்டில் மிகச் செல்வாக்குள்ள எழுத்தாளர்களில் ஒருவரெனக் கருதப்படுகிறார். இவர் எழுதிய உலிசெஸ் (1922), அதைத் தொடர்ந்து வந்ததும் சர்ச்சைக்கு உள்ளானதுமான பினகன்ஸ் வேக் (1939), டப்ளினர்ஸ் என்னும் சிறுகதைத் தொகுப்பு (1914), ஒரு அரை குறைத் தன்கதையான இளைஞனாக ஒரு கலைஞனின் வடிவம் (A Portrait of the Artist as a Young Man - 1916) போன்றவற்றின் மூலம் இவருக்குப் பரவலான புகழ் கிடைத்தது.

வளர்ந்த நிலையில் தனது வாழ்வின் பெரும் பகுதியை அயர்லாந்துக்கு வெளியிலேயே கழித்த போதும், ஜோய்சின் உளவியல் மற்றும் கற்பனைக் கதைகள் அனைத்தும் அவரது சொந்த நகரான டப்ளினிலேயே வேர்விட்டிருந்தன. இவரது கதைகளின் களங்களையும், கருப்பொருள்களையும் டப்ளினே அவருக்கு வழங்கியது. சொந்த இடத்துக்கு அவர் கொடுத்த நுணுக்கமான கவனம், தானாகவே நாடுகடந்து வாழ்ந்தமை, ஐரோப்பா முழுவதிலும், சிறப்பாகப் பாரிசில் அவருக்கு இருந்த செல்வாக்கு என்பன அவரை, ஒரு உலகம் தழுவியவராகவும், அதேநேரம் ஒரு குறிப்பிட்ட பகுதியின்மீது மட்டும் கவனத்தைச் செலுத்தியவராகவும் ஒரு முரண்பட்ட தோற்றத்தில் காட்டுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_ஜோய்ஸ்&oldid=1668113" இருந்து மீள்விக்கப்பட்டது