ஆனையிறவு
| ஆனையிறவு | |
| ஆனையிறவில் உள்ள கைவிடப்பட்ட போர்த் தாங்கி ஒன்று. | |
| மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - கிளிநொச்சி |
| அமைவிடம் | |
| கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
ஆனையிறவு இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கடலோர சமவெளி ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டை வன்னிப் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஈழப் போருக்கு முன்னதாக இலங்கையின் மிகப்பெரிய உப்பளம் இங்கே அமைந்திருந்தது.
புவியியலும் காலநிலையும் [தொகு]
ஆனையிறவு கடலோர சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 3 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. [1]
ஈழப்போரில் ஆனையிறவு [தொகு]
1760 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் முதலாவதாக இங்கே பாதுகாப்புத் தளம் ஒன்றை அமைத்தனர். 1952 ஆம் இலங்கை இராணுவம் இங்கே தனது தளத்தை அமைத்துக் கொண்டது. இத்தளத்தைக் கைப்பற்ற விடுதலைப் புலிகள் பல முறை முயன்ற போதும், 2000 ஆண்டு வரை இத்தளம் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1991ல் விடுதலைப் புலிகள் இத்தளத்தைக் கைப்பற்ற பெரும் சண்டையிட்டுத் தோற்றனர். (முதலாவது ஆனையிறவுச் சண்டையைப் பார்க்க). ஏப்ரல் 22, 2000 இரண்டாம் ஆனையிறவுச் சண்டையின் போது விடுதலைப் புலிகள் இத்தளத்தைக் கைப்பற்றினர்.[2][3] [4][5][6]. விடுதலைப் புலிகளிடம் இருந்து இத்தளத்தை இலங்கை இராணுவம் 2009, ஜனவரி 10 ஆம் நாள் மீண்டும் கைப்பற்றியது[7].