இதித் ஸ்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனித சிலுவையின் தெரெசா பெனடிக்டா
கன்னியர், இரத்த சாட்சி
பிறப்பு அக்டோபர் 12, 1891(1891-10-12)
வார்க்லோ, ஜெர்மன் பேரரசு
இறப்பு ஆகத்து 9 1942 (அகவை 50)
ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாம், போலந்து
ஏற்கும் சபை கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல் மே 1, 1987, கோலோன், செருமனி
புனிதர் பட்டம் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல் அக்டோபர் 11, 1998
திருவிழா 9 ஆகஸ்ட்
சித்தரிக்கப்படும் வகை புத்தகம், அக்கினிக் கொழுந்து, மஞ்சள் நிற தாவீதின் விண்மீன்
பாதுகாவல் ஐரோப்பா, அனாதைகள், உலக இளைஞர் தினம்[1]


புனித இதித் ஸ்டைன் (Saint Edith Stein, அக்டோபர் 12, 1891ஆகத்து 9, 1942) ஒரு ஜேர்மானிய - யூத மெய்யியலாளர் ஆவார். இவர் தன் குடும்பத்தின் ஏழாவது கடைசி குழந்தை. இவர் தனது 13-ஆம் அகவையில் யூத மதத்தின் மேது நம்பிக்கை இழந்தார். தன் நண்பர்களின் உறுதியான கத்தோலிக்க நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு, சுய ஆர்வமோடு மறைகல்வி பயின்று 1-ஜனவரி-1922 அன்று திருமுழுக்கு பெற்றார். 1934-ஆம் ஆண்டு சிலுவையின் தெரெசா பெனடிக்டா- என்ற பெயரோடு, கார்மேல் சபையில் சேர்ந்தார்.

இதித் ஸ்டைனின் நினைவுச் சின்னம், பிராகா

பின்பு அவர், ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1938-ஆம் ஆண்டு நாசி கலகத்தினால் நெதர்லாந்துக்கு தப்பி ஓடினார். இருப்பினும் 1942-ஆம் ஆண்டு இவரும், இவரின் சகோதரி ரோசும், கைது செய்யப்பட்டு, ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாமில் அடைக்கப்பட்டார்கள். அங்கே வாயு அறையில் அடைக்கப்பட்டு இவர் இறந்தார்.

[தொகு] குறிப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=இதித்_ஸ்டைன்&oldid=975100" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்