வலைவாசல்:கிறித்தவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

purge


கிறித்தவம் லைவாசல்
Sermon on the Mount

கிறித்தவம் ஓரிறைக் கொள்கையுடைய (Monotheism) சமயமாகும். தமிழில் கிறித்தவம், கிறித்துவம், கிறிஸ்தவம் என்றும் குறிப்பர். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை மேசியா (மீட்பர்) என்றும் கிறிஸ்த்து (ஆசிர்வதிக்கப் பட்டவர்) எனவும் விசவாசிக்கின்றனர். 2.1 பில்லியன் விசுவாசிகளை கொண்டு உலகின் பெரிய சமயமாக காணப்படுகிறது. கிறிஸ்தவம் பல உட்கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்கம் மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் ஒரு பிரிவாக ஆரம்பிக்கப்பட்டதன் காரணத்தினால் யூத மதத்தின் நூலை, பழைய ஏற்பாட்டாகக் கொண்டுள்ளது. இதில் யூதரின் புனித நூலான எபிரேய விவிலியத்தை கிறிஸ்தவர் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூத, இஸ்லாம் மதங்ளைப் போலவே கிறிஸ்தவமும் அபிரகாமிய (Abrahamic) (ஆபிரகாம் வழிவந்த)சமயமாகும்.

கிறித்தவம் பற்றி மேலும் அறிய..
தொகு  

சிறப்புக் கட்டுரை


Simon ushakov last supper 1685.jpg

பெரிய வியாழன் என்பது கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாட்களை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது பெரிய வாரம் அல்லது புனித வாரம் என்று அழைக்கப்படுகின்ற நாள்களில் வருகின்ற வியாழக்கிழமை ஆகும். பெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவுணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுகூர்கிறது. இந்நிகழ்ச்சி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது. இவ்விழா ஆண்டுதோறும் மார்ச் 19இலிருந்து ஏப்ரல் 22 காலப்பகுதியில் இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகின்ற ஞாயிறு எந்நாளில் நிர்ணயிக்கப்படுகிறதோ அதைச் சார்ந்து பெரிய வியாழனும் நிர்ணயிக்கப்படும். கத்தோலிக்க திருச்சபை உட்பட மேலைத் திருச்சபைகள் கிரகோரி நாட்காட்டியின் படியும், கீழைத் திருச்சபைகள் ஜூலியன் நாட்காட்டியின் படியும் இந்நாளை நிர்ணயிக்கின்றன. பெரிய வியாழன் கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் வருகின்ற "உயிர்த்தெழுதல் முப்பெரும் விழாவின்" முதல் நாள் ஆகும். இரண்டாம் நாள் புனித வெள்ளி. மூன்றாம் நாள் புனித சனி என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்று நாள்களிலும் கிறித்தவர்கள் தங்கள் மறைசார்ந்த புனித நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர்.

தொகு  

மேற்கோள்கள்


Ichthus.svg

எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
- 1 தெசலோனிக்கர் 5 :16-18

கிறித்தவம் குறித்த குப்புகள்


தொகு  

உங்களுக்குத் தெரியுமா...


Luther46c.jpg
சிறப்புப் டம்
நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்காவின் உள் தோற்றம்
படிம உதவி:
நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்காவின் உள் தோற்றம்

சேமிப்பீயின் தேக்க்கத்தைப் போக்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:கிறித்தவம்&oldid=976442" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்