கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செபதேயுவின் மகனான புனித யாக்கோபு |

செபதேயுவின் மகனான புனித யாக்கோபு
ஓவியர்: ரெம்பிரான்ட்
இங்கே இவர் ஒரு திருப்பயணியின் உடையில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார் . |
| திருத்தூதர் மற்றும் மறைசாட்சி |
| பிறப்பு |
1ம் நூற்றாண்டு
பெத்சாயிதா, கலிலேயா |
| இறப்பு |
44 கி.பி
யுதேயா |
| ஏற்கும் சபை/சமயம் |
எல்லா கிறித்தவ உட்பிரிவுகளும் |
| முக்கிய திருத்தலங்கள் |
சாந்தியாகோ தே கோம்போசுதேலா நகரின் கதீடிரல், கலீசியா |
| திருவிழா |
25 ஜூலை (மேற்கு கிறித்தவம்)
30 ஏப்ரல் (கிழக்கு கிறித்தவம்)
30 டிசம்பர் (ஹிஸ்பானிய திருச்சபை) |
| சித்தரிக்கப்படும் வகை |
முத்துச்சிப்பி/சோழி, திருப்பயணியின் தொப்பி மற்றும் உடை |
| பாதுகாவல் |
இடங்கள்
கலீசியா, குவாத்தமாலா, நிக்கராகுவா, எசுப்பானியா
தொழில்கள்
கால்நடை மருத்துவர்கள், குதிரையேற்றம், விலங்கின் மென்மயிரால் பொருட்களைச் செய்து விற்ப்பவர்கள், தோல் பதப்படுத்துபவர்கள், மருந்தக பணியாளர் |
செபதேயுவின் மகன் யாக்கோபு (அரமேய மொழி Yaʕqov, Greek Ιάκωβος, இறப்பு 44 கி.பி) என்பவர் இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரின் பெற்றோர் செபதேயு மற்றும் சலோமி ஆவர். இவர் திருத்தூதரான புனித யோவானின் சகோதரர். அல்பேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து இவரைப் பிரித்து காட்ட இவர் பெரிய யாக்கோபு (James the Greater) என்றும் அழைக்கப்படுகின்றார்.
புதிய ஏற்பாட்டில் [தொகு]
யாக்கோபு இயேசுவின் முதல் சீடர்களுல் ஒருவராக விவரிக்கப்படுகிறார். ஒத்தமை நற்செய்தி நூல்களின் படி இவரும் இவரின் சகோதரரான யோவானும் இயேசுவிடமிருந்து அழைப்பு பெறும் போது தங்களின் தந்தையோடு கடர்கறையில் இருந்தனர்.Matt. 4:21-22Mk. 1:19-20 இயேசுவின் தோற்றம் மாறியதை (Transfiguration) கண்ட மூன்று அப்போஸ்தலர்களுல் இவரும் ஒருவராவார்.[1] சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளாததால் யாக்கோபும் யோவானும் இயேசுவிடம், ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.Lk 9:51-6 திருத்தூதர் பணிகள் 12:2 இன் படி ஏரோது அரசன், யாக்கோபை தன் வாளால் கொன்றான். திருத்தூதர்களுல் புதிய ஏற்பாட்டில் இவரின் இறப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பாரம்பரிய நம்பிக்கையின் படி 12 திருத்தூதர்களில் இவரே முதல் இரத்த சாட்சி என நம்பப்படுகிறது.Acts 12:1-2
பக்தி முயற்சிகள் [தொகு]
இவர் எசுப்பானியா நாட்டின் பாதுகாவலராக கருதப்படுகின்றார். இவரின் கல்லறை கலீசியாவில் உள்ள சாந்தியாகோ தே கோம்போசுதேலா கத்தீடிரலில் உள்ளதாக நம்பப்படுகின்றது. பரம்பரியமாக இவரின் கல்லறைக்கு செல்லும் பக்தி முயர்ச்சி புனித யாக்கோபுவின் பாதை என அழைக்கப்படுகின்றது. இப்பக்தி முயற்ச்சி நடுக் காலம் முதல் பல இடங்களில் இருப்பவர்களிடம் பரவியது.
இவரின் விழா நாள் 25 ஜூலை அன்று கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், லூதரனியம் மற்றும் சில சீர்திருத்தத் திருச்சபைகளில் கொண்டாடப்படுகின்றது. மரபுவழி திருச்சபைகளில் 30 ஏப்ரலில் கொண்டாடப்படுகின்றது.
எசுப்பானியாவில் [தொகு]
புனித யாக்கோபுவின் சிலுவை
பாரம்பரியப்படி சனவரி 2, 40 (கி.பி) இவருக்கு ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் மறைபணியாற்றிக்கொண்டிருக்கும் போது மரியாளின் காட்சி கிடைத்ததாகவும் அதன் பின்னரே இவர் எருசலேமுக்கு சென்று உயிர் துறந்ததாகவும் நம்பப்படுகின்றது.[2][3] மேலும் இதன் பின் இவரின் உடல் சாந்தியாகோ தே கோம்போசுதேலா ஆலயம் அமைந்துள்ள கலீசியா கடற்கறைக்கு தேவதூதர்களால் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கிருந்தவர்கள் இவரின் உடலை அடக்கம் செய்ததாகவும் நம்பப்படுகின்றது. எனினும் இவரின் சீடர்களாலேயே இவரின் உடல் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகின்றனர்.
இராணுவ ஒழுங்கு [தொகு]
மூர் இணத்தவர்களை வெல்ல துவங்கப்பட்ட பிரிவான கபலேரோஸ் சான்டியாகுஸ்தாஸ் பின்நாட்களில் ஒரு பெரும் மதிப்பிற்குறிய பிரிவாக விளங்கியது, டியேகோ வெலாஸ்க்குவெஸ் போன்றோர் இப்பிரிவின் சின்னமான புனித யாக்கோபுவின் சிலுவையை தங்களின் உடையில் பொறிக்கும் மரியாதையினைப்பெற ஆவலாயிருந்தனர்.
காங்கோ [தொகு]
புனித யாக்கோபுவிற்க்கு நடு ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ பேரரசில் சிறப்பு பக்தி முயர்ச்சிகள் உள்ளது. 1483ஆம் ஆண்டு போர்த்துகீசியர் இங்கு வந்து இறங்கிய போது, இவரின் பக்தி முயர்ச்சிகளை கொண்டு வந்தனர். இந்நாட்டின் பேரரசம் முதலாம் அல்போன்சோ இவரால் தனக்கு போரில் வெற்றி கிடைத்தது என்று கூறி இவரின் விழாநாளை தேசிய விடுமுறை நாள் ஆக்கினான். காலப்போக்கில் புனித யாக்கோபுவின் நாள் காங்கோ பேரரசில் தேசிய விடுமுறை நாள் வழக்கமாகிப் போனது.. அன்று வரிகளை அன்று சேகரிக்கப்பட்டன. இராணுவ பணிக்கு தகுதி உள்ள ஆண்கள் ஆயுதமேந்தி தோன்ற பணிக்கப்பட்டனர். பொதுவாக வட்டார கொண்டாட்டங்களும், தலைநகரில் பெருவிழாவும் கொண்டாடப்பட்டன. பின் நாட்களில் இங்கிருந்த அடிமைகள் புதிய உலகிற்கு கொண்டு செல்லப்பட்டபோது இக்கொண்டாட்டங்களை உடன் எடுத்துச்சென்றனர். இந்நாள் அளவும் ஹெய்டி மற்றும் போர்த்தோ ரிக்கோவில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
இசுலாம் [தொகு]
திருக்குரானுக்கு உரை எழுதிய பலர் இவரை இயேசுவின் சீடரெனக்கொள்கின்றனர். அவர்கள் இவரை يعقوب என அழைக்கின்றனர்.[4]
மொர்மனியம் [தொகு]
மொர்மனிய கொள்கயை உடையவர்கள் இவர் பேதுருவுடனும் யோவானுடனும் 1829-ஆம் ஆண்டு உயிர்பெற்று வந்து இக்கொள்கயின் பரப்புணரான ஜோசப் ஸ்மித்தை குருவாக திருநிலைப்படுத்தி அப்போஸ்தலிக்க வழிமரபை தொடரச்செய்ததாக நம்புகின்றனர்.[5]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ Matthew 17:1-9, Mark 9:2-8, Luke 9:28-36.
- ↑ Chadwick, Henry (1976), Priscillian of Avila, Oxford University Press
- ↑ Fletcher, Richard A. (1984), Saint James's Catapult : The Life and Times of Diego Gelmírez of Santiago de Compostela, Oxford University Press, http://libro.uca.edu/sjc/sjc.htm
- ↑ Historical Dictionary of Prophets In Islam And Judaism, Brandon M. Wheeler, Disciples of Christ: "Muslim exegesis identifies the disciples as Peter, Andrew, Matthew, Thomas, Philip, John, James, Bartholomew, and Simon"
- ↑ Doctrine and Covenants 27:12.
வெளி இணைப்புகள் [தொகு]
|
கத்தோலிக்க புனிதர்கள் அகர வரிசை (வழிபாட்டு ஆண்டு விழா முறைப்படி) |
|
அக்கிலேயு, நெரேயு · அக்குவினோ நகர் தோமா · அகஸ்டின் ஜாவோ ரோங்கு · அகுஸ்தீன் · அகுஸ்தீன் (கான்றர்பரி நகர்) · அங்கேரி எலிசபெத்து · அங்கேரி ஸ்தேவான் · அசிசி நகர் பிரான்சிஸ் · அடால்பெர்ட் · அத்தனாசியு · அந்தியோக்கு நகர் இஞ்ஞாசி · அந்திரேயா · அந்தோணியார் (பதுவா நகர்) · அந்தோணி மரிய கிளாரெட் · அந்தோனி மரிய செக்கரியா · அப்போலினாரிஸ் · அம்புரோஸ் · அரசியான தூய கன்னி மரியா · அருளானந்தர் (ஜான் தெ பிரிட்டோ) · அல்போன்ஸ் மரிய லிகோரி · அல்போன்சா முட்டாத்துப்பாடாத் · அலக்கோக்கு மார்கரீத் மரியா · அலெக்சாந்திரியா நகர் கேத்தரின் · அலெக்சாந்திரியா நகர சிரில் · அலோசியுஸ் கொன்சாகா · அவிலா நகர் இயேசுவின் தெரேசா · அன்னா, சுவக்கீம் (தூய மரியாவின் பெற்றோர்) · அன்னை தெரேசா · ஆகத்தா · ஆக்னெஸ் · ஆஞ்சலா மெரிசி · ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் · ஆண்டவரின் தோற்றமாற்றம் · அன்னை (கன்னி மரியாவின் பிறப்பு) · ஆல்பர்ட் (பெரிய) · ஆன்சலம் · ஆன்ஸ்காரியு · ஆன்ரூ கிம் தே கோன் · ஆன்ரு டுங் லாக் · இசிதோர் · இஞ்ஞாசி (லொயோலா) · இப்போலித்து; போன்சியானு · இயேசுவின் (அவிலா நகர்) தெரேசா · இயேசுவின் திருப்பெயர் · இரண்டாம் சிக்ஸ்து · இரபேல்; கபிரியேல்; மிக்கேல் ·இரனேயு · இரேய்முந்து பெனாப்போர்த்து · இலாரியார் · இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு · இறை யோவான் · இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் · ஈசாக்கு ஜோகு; ஜான் பிரபூபு · உரோமைத் திருச்சபையின் முதல் மறைச்சாட்சியர் · எட்விஜ் · எபிரேம் · எமிலியன் எரோணிமுசு · எருசலேம் நகர் சிரில் · எரோணிமுசு · எரோணிமுசு எமிலியன் · எலிசபெத்து (அங்கேரி) · எலிசபெத்து (போர்த்துகல் · எலியாஸ் சவாரா குரியாக்கோஸ் · என்றி · ஏழாம் கிரகோரி · ஐந்தாம் பயஸ் · கசிமீர் · கபிரியேல், மிக்கேல், இரபேல் · கப்பெஸ்தரானோ நகர் யோவான் · கமில்லஸ் தெ லெல்லிஸ் · கயத்தான் · கலசான்ஸ் நகர் யோசேப்பு · கலிஸ்து (முதலாம்) · கனீசியு பீட்டர் · காசியா சபை ரீத்தா · கார்மேல் அன்னை · காவல் தூதர்கள் (தூய) · அகுஸ்தீன் (கான்றர்பரி நகர்) · கான்டி நகர் யோவான் · கிம் தே கோன், ஆன்ரூ · கிரகோரியார்; நசியான்சன்; பெரிய பசிலியார் · கிரகோரி (பெரிய) · கிரகோரி (ஏழாம்) · கிளமெண்ட் (முதலாம்) · கிளாரா ·கிளாவர் பீட்டர் · யோவான் கிறிசோஸ்தோம் · கிறிசோலோகு பீட்டர் · கிறிஸ்டோபர் மெகாலன் · கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு · குரியாக்கோஸ் எலியாஸ் சவாரா · குழந்தை இயேசுவின் தெரேசா · கேத்தரின் (அலெக்சாந்திரியா நகர்) · கேத்தரின் (சியென்னா நகர்) · கொர்னேலியு; சிப்பிரியான் · மரியா கொரெற்றி · கொலும்பன் · கொன்சாகா அலோசியுஸ் · கொன்சாலோ கார்சியா · கோஸ்மாஸ்; தமியான் · சலேசியார் பிரான்சிஸ் · சவேரியார் பிரான்சிஸ் · சனுவாரியுசு · சாந்தால் நகர் ஜான் பிரான்சிஸ்கா · சார்லஸ் பொரோமியோ · சார்லஸ் லுவாங்கா · சார்பெல் மாக்லுப் · சானல் பியர் · சிக்மரிங்கன் நகர் பிதேலிஸ் · சிக்ஸ்து (இரண்டாம்) · சிப்பிரியான் · சியென்னா நகர் கேத்தரின் · சியன்னா நகர் பெர்னார்தீன் · சிராமெல் மரிய தெரேசா · அலெக்சாந்திரியா நகர சிரில் · சிரில் (எருசலேம் நகர்) · சிரில்; மெத்தோடியு · சில்வெஸ்தர் (முதலாம்) · சிலுவையின் பவுல் · சிலுவையின் யோவான் · சீமோன்; யூதா · சுவக்கீம்; அன்னா · செசிலியா · செபஸ்தியார் · செபமாலை அன்னை · சோங் காசாங் பவுல் · ஜஸ்டின் · ஜார்ஜ் · ஜாவோ ரோங்கு அகஸ்டின் · ஜான் தெ பிரிட்டோ · ஜான் பாப்டிஸ்ட் (லசால் நகர்) · ஜான் பிரபூபு; ஈசாக்கு ஜோகு · ஜான் பிரான்சிஸ்கா (சாந்தால் நகர்) · ஜான் பிசர்; தாமஸ் மூர் · ஜான் போஸ்கோ · ஜான் மரிய வியான்னி · ஜான் யூட்ஸ் · ஜூலியன் எய்மார்ட் பீட்டர் · ஜெர்த்ரூது · யோசப் வாசு · ஜோஸ்பீன் பக்கீத்தா · ஸ்காட்லாந்து மார்கரீத் · ஸ்கொலாஸ்திக்கா · ஸ்தேவான் · டுங் லாக் ஆன்ரூ · தமசுஸ் (முதலாம்) · தமசேன் யோவான் · தமியான்; கோஸ்மாஸ் · தமியான் பீட்டர் · தனிஸ்லாஸ் · தாமஸ் பெக்கட் · தாமஸ் மூர்; ஜான் பிசர் · திமொத்தேயு; தீத்து · திருச்சிலுவையின் தெரேசா பெனடிக்டா · திருச்சிலுவையின் மகிமை · திருமுழுக்கு யோவானின் பிறப்பு · திருமுழுக்கு யோவானின் பாடுகள் · தியோனிசியு · தீத்து; திமொத்தேயு · துரீபியு மாங்ரோவேகோ · தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் · தூய கன்னி மரியா அரசி · தூய கன்னி மரியா இறைவனின் தாய் · தூய கன்னி மரி ஊழியர் சபை நிறுவிய புனிதர் எழுவர் · தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் · தூய கன்னி மரியாவின் கணவர் யோசேப்பு · தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் · தூய கன்னி மரி பிறப்பு (ஆரோக்கிய அன்னை) · தூய கன்னி மரியாவின் பெற்றோர் சுவக்கீம், அன்னா · தூய கன்னி மரி பேராலய நேர்ந்தளிப்பு (பனிமய அன்னை) · தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு · தூய கார்மேல் அன்னை · தூய காவல் தூதர்கள் · தூய செபமாலை அன்னை · தூய பாத்திமா அன்னை · தூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) · தூய லூர்து அன்னை · தூர் நகர் மார்ட்டின் · தெ பால் வின்சென்ட் · தெ பிரிட்டோ ஜான் (அருளானந்தர்) · தெ போரஸ் மார்ட்டின் · தெ லெல்லிஸ் கமில்லஸ் · தெரசா (அன்னை) · தெரேசா (இயேசுவின்) (அவிலா நகர்) · தெரேசா (குழந்தை இயேசுவின்) · தெரேசா பெனடிக்டா (திருச்சிலுவையின்) · தொழிலாளர் யோசேப்பு · தோமா · தோமா (அக்குவீனோ நகர்) · தோமினிக் · தோமினிக் சாவியோ · நசியான்சன் கிரகோரியார்; பெரிய பசிலியார் · நார்பெர்ட் · நிக்கோலாஸ் · நெரேயு; அக்கிலேயு · நேரி பிலிப்பு · நோலா பவுலீனு · பக்கீத்தா ஜோஸ்பீன் · பங்கிராஸ் · பசிலியார் (பெரிய); நசியான்சன் கிரகோரியார் · பத்தாம் பயஸ் · பதுவா நகர் அந்தோணியார் · பபியான் · பயஸ் (ஐந்தாம்) · பயஸ் (பத்தாம்) · பர்த்தலமேயு · பர்னபா · பவுல் (சிலுவையின்) · பவுல் சோங் காசாங் · பவுல்; பேதுரு · பவுல், பேதுரு பேராலயங்களின் நேர்ந்தளிப்பு · பவுல் மனமாற்றம் · பவுல் மீகி · பவுலீனு நோலா · பவோலா பிரான்சிஸ் · பனிமய அன்னை (தூய கன்னி மரி பேராலய நேர்ந்தளிப்பு · பாசி நகர் மகதலா மரியா · பாத்திமா அன்னை (தூய) · பிசர் ஜான்; தாமஸ் மூர் · பிதேலிஸ் (சிக்மரிங்கன் நகர்) · பியர் சானல் · பிரான்சிஸ்கா (உரோமை நகர்) · பிரான்சிஸ் (அசிசி நகர்) · பிரான்சிஸ் சலேசியார் · பிரான்சிஸ் சவேரியார் · பிரான்சிஸ் பவோலா · பிரிசித்தா · பிரிந்திசி நகர் லாரன்ஸ் · பிலிப்பு நேரி · பிலிப்பு; யாக்கோபு · பிளாசியு · பீட்டர் கனீசியு · பீட்டர் கிறிசோலகு · பீட்டர் கிளாவர் · பீட்டர் ஜூலியன் எய்மார்ட் · பீட்டர் தமியான் · பீட்டர் மார்சலின் · பீடு (வணக்கத்துக்குரிய) · புரூனோ · புனிதர் அனைவர் · பெக்கட் தாமஸ் · பெர்நார்ட் · பெர்பெத்துவா; பெலிசித்தா · பெலிசித்தா; பெர்பெத்துவா · பெர்னார்தீன் (சியன்னா நகர்) · பெரர் வின்சென்ட் · பெரிய ஆல்பெர்ட் · பெரிய கிரகோரியார் · பெரிய லியோ · பெல்லார்மின் ராபர்ட் · பெனடிக்ட் · பெனடிக்டா தெரேசா (திருச்சிலுவையின்) · பெனாப்போர்த்து இரேய்முந்து · பேட்ரிக் · பேதுருவின் தலைமைப் பீடம் · பேதுரு; பவுல் · பொரோமியோ சார்லஸ் · பொலிக்கார்ப்பு · பொனவெந்தூர் · போஸ்கோ ஜான் · போன்சியானு; இப்போலித்து · போனிப்பாஸ் · மகதலா மரியா · மகதலா மரியா (பாசி நகர்) · மத்தியா · மத்தேயு · மரிய கிளாரெட் அந்தோணி · மரியா கொரெற்றி · மரிய கோல்பே மாக்சிமிலியன் · மரிய செக்கரியா · மரிய தெரேசா சிராமெல் · மரிய லிகோரி அல்போன்ஸ் · மரிய வியான்னி ஜான் · மரியா மகதலா · மரியா மகதலா (பாசி நகர்) · மரியாவின் திருப்பெயர் · மறைச்சாட்சியர் (உரோமைத் திருச்சபையின்) · மாக்சிமிலியன் மரிய கோல்பே · மாக்லுப் சார்பெல் · மாங்ரோவேகோ துரீபியு · மாசில்லாக் குழந்தைகள் · மார்கரீத் மரியா அலக்கோக்கு · மார்சலின் பீட்டர் · மார்ட்டின் தெ போரஸ் · மார்ட்டின் (தூர் நகர்) · மார்ட்டின் (முதலாம்) · மார்த்தா · மாற்கு · மான்போர்ட் நகர் லூயி மரிய கிரிஞ்ஞோ · மிக்கேல், கபிரியேல், ரபேல் (அதிதூதர்கள்) · மீகி பவுல் · முட்டாத்துபாடாத் அல்போன்சா · முதலாம் கலிஸ்து · முதலாம் சில்வெஸ்தர் · முதலாம் கிளமெண்ட் · முதலாம் தமசுஸ் · முதல் மறைச்சாட்சியர் (உரோமைத் திருச்சபையின்) · முதலாம் மார்ட்டின் · மெகாலன் கிறிஸ்டோபர் · மெத்தோடியு; சிரில் · மெரிசி ஆஞ்சலா · மோனிக்கா · யாக்கோபு · யாக்கோபு; பிலிப்பு · யுசேபியு (வெர்செல்லி நகர் · யூட்ஸ் ஜான் · யூதா; சீமோன் · யோசபாத்து · யோசேப்பு (கலசான்ஸ் நகர்) · யோசேப்பு (தூய கன்னி மரியாவின் கணவர்) · யோசேப்பு (தொழிலாளர்) · யோவான் · யோவான் (இறை) · யோவான் (கப்பெஸ்த்தரானோ நகர்) · யோவான் (கான்டி நகர்) · யோவான் கிறிசோஸ்தோம் · யோவான் (சிலுவையின்) · யோவான் தமசேன் · யோவான் (முதலாம்) · யோவான் லெயோனார்ட் · யோவானின் (திருமுழுக்கு) பிறப்பு · யோவானின் (திருமுழுக்கு) பாடுகள் · ரபேல், மிக்கேல், கபிரியேல் (அதிதூதர்கள்) · ராபர்ட் பெல்லார்மின் · ரீத்தா (காசியா சபை) · ருய்ஸ் லாரன்ஸ் · ரோசா (லீமா நகர்) · ரோமுவால்து · லசால் நகர் ஜான் பாப்டிஸ்ட் · லாரன்ஸ் · லாரன்ஸ் (பிரிந்திசி நகர்) · லாரன்ஸ் ருய்ஸ் · லீமா நகர் ரோசா · லுஸ்தானியா நகர் எலிசபெத்து · லுவாங்கா சார்லஸ் · லூக்கா · லூசியா · லூயி · லூயி மரிய கிரிஞ்ஞோ (மான்போர்ட் நகர் · லூர்து அன்னை (தூய) · லெயோ (பெரிய) · லெயோனார்ட் யோவான் · லொயோலா இஞ்ஞாசி · புனித வனத்து அந்தோனியார் · வணக்கத்துக்குரிய பீடு · யோசப் வாசு · வியாகுல அன்னை (தூய மரியாவின் துயரங்கள் · வியான்னி மரிய ஜான் · வின்சென்ட் · வின்சென்ட் தெ பால் · வின்சென்ட் பெரர் · வெர்செல்லி நகர் யுசேபியு · வென்செஸ்லாஸ் ·
|
|