பிங்கெனின் ஹில்டெகார்ட்
| பிங்கெனின் ஹில்டெகார்ட் | |
இல்டெகார்ட் ஞானம் பெறுவதையும் அதனை தமது எழுத்தரும் செயலருமானவருக்கு சொல்விப்பதும் லிபெர் சிவியசு (Liber Scivias) சித்திரமொன்றில் |
|
| ரைனின் குறிகாரி | |
|---|---|
| பிறப்பு | 1098 பெர்மெர்சீம் வோர் டெர் யோகே |
| இறப்பு | செப்டம்பர் 17 1179 (அகவை 81) ரைன் ஆற்றுக்கரை பிங்கென் |
| ஏற்கும் சபை | ரோமன் கத்தோலிக்கம், அங்கிலிகன் கம்யூனியன், லூதரனிசம் |
| புனிதர் பட்டம் | முறைமையான பட்டமளிப்பில்லை, ஆயினும் அவர் பெயர் ரோமன் புனிதர் பட்டியலில் உள்ளது [1] |
| முக்கிய திருத்தலங்கள் | ஐபிங்கென் மாதாகோவில் |
| திருவிழா | செப்டம்பர் 17 |
பிங்கெனின் ஆசிர்வதிக்கப்பட்ட ஹில்டெகார்ட் (Blessed Hildegard of Bingen) (இடாய்ச்சு:Hildegard von Bingen; இலத்தீன்:Hildegardis Bingensis) (1098 – 17 செப்டம்பர் 1179), மற்றும் புனித இல்டெகார்ட், ரைனின் குறிகாரி என்றும் அறியப்படும் இவர் ஓர் எழுத்தர், படைப்பாளி,மெய்யியலாளர்,கிறித்தவ உள்ளுணர்வாளர், பாப்பரசரால் ஆசிர்வதிக்கப்பட்ட செருமானிய கன்னிமடத் தலைவி மற்றும் பன்முக திறனாளர்.[2] 1136ஆம் ஆண்டில் கன்னிமாடத்தலைவியாக சக கன்னித்துறவிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இல்டெகார்ட் 1150ஆம் ஆண்டில் ரூபரட்சுபெர்க்கில் ஓர் மடத்தையும் 1165ஆம் ஆண்டு ஐபிங்கெனில் ஓர் மடத்தையும் நிறுவினார். இவரது ஆக்கமான ஓர்டோ விர்சுதும் (Ordo Virtutum) கிறித்தவ சமய நாடகங்களுக்கு ஓர் முன்னோடியாகும்.[3] சமயவியல்,தாவரவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் எழுதியுள்ளார். மேலும் இவரது படைப்புகளில் கடிதங்கள், சமயப் பாடல்கள், கவிதைகள் மற்றும் நாடகங்களும் அடங்கும். சிறு சித்தரிப்புகளையும் மேற்பார்வையிட்டுள்ளார்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑
"St. Hildegard". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். - ↑ Bennett, Judith M. and Hollister, Warren C. Medieval Europe: A Short History (New York: McGraw-Hill, 2001), 317.
- ↑ Some writers have speculated a distant origin for opera in this piece, though without any evidence. See: [1]; alt Opera, see Florentine Camerata in the province of Milan, Italy. [2] and [3]
[தொகு] வெளியிணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் Hildegard von Bingen தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Hildegard Center for the Arts, A Faith Based Fine Arts Center in Lincoln Nebraska
- International Society of Hildegard von Bingen Studies
- A Hildegard FAQ Sheet
- Hildegard Von Bingen
"St. Hildegard". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். - Hildegard of Bingen Documents, History, Sites to see today, etc.