சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை)
| புனித சிம்ப்ளீசியுஸ் | |
|---|---|
| 47ஆம் திருத்தந்தை | |
| ஆட்சி துவக்கம் | 468 |
| ஆட்சி முடிவு | மார்ச்சு 10, 483 |
| முன்னிருந்தவர் | ஹிலாரியுஸ் |
| பின்வந்தவர் | மூன்றாம் ஃபெலிக்ஸ் |
| பிற தகவல்கள் | |
| இயற்பெயர் | சிம்ப்ளீசியுஸ் |
| பிறப்பு ஆண்டு: பிறந்த இடம் | ??? திவோலி, மேற்கத்திய ரோம பேரரசு |
| இறப்பு ஆண்டு: இறந்த இடம் | மார்ச்சு 10 483 உரோமை நகரம், ஒடோசர் பேரரசு |
| புனிதர் பட்டம் | |
| திருவிழா | மார்ச்சு 10 |
திருத்தந்தை புனித சிம்ப்ளீசியுஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 468-இல் இருந்து மார்ச்சு 10, 483 வரை இருந்தவர்.
இவர் திவோலி, இத்தாலியில் பிறந்தவர். இவரின் தந்தை சாஸ்தினுஸ் ஆவார். அவரைப்பற்றிய கிடைக்கப்பெற்ற செய்திகளனைத்தும் திருத்தந்தையர் நூல் (Liber Pontificalis) வழியாகவே கிடைத்ததாகும்.
இயுட்சியன் பதித்ததிற்கு எதிராக குரல் கொடுத்த சால்சிடோன் சங்கத்தை இவர் ஆதரித்தார். பார்பாரியன் படையெடுப்பாளர்களிடமிருந்து இத்தாலியை காக்க மக்களை ஒருங்கிணைத்தார். ஒடோஏசரை 476-இல் இத்தாலியின் அரசனாக முடி சூட்டினார். ஒடோஏசர் இத்தாலியின் நிர்வாகத்தில் சில மாற்றங்கள் செய்து, இத்தாலி அதன் ஆயரான புனித சிம்ப்ளீசியுஸின் கைகளிலேயே உறுதியாக இருக்கச் செய்தான்.
அவர் உரோமையின் அதிகாரத்தை மேற்கிலேயே தக்கவைக்க பணியாற்றினார்
இரத்த சாட்சியான புனித பிபியானாவின் நினைவாக உரோமையில் இவர் சான்டா பிபியானா கோவிலை கட்டினார்.
இவரின் விழா நாள், இவர் இறந்த நாளான மார்ச் 10 ஆகும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Martyrologium Romanum (Libreria Editrice Vaticana 2001 ISBN 88-209-7210-7)
வெளி இணைப்புகள்[தொகு]
- Opera Omnia by Migne, Patrologia Latina with analytical indexes. This links also holds the Vita Operaque section by Libro Pontificali
"Pope St. Simplicius". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913).
| முன்னர் ஹிலாரியுஸ் |
திருத்தந்தை 468–483 |
பின்னர் மூன்றாம் ஃபெலிக்ஸ் |