இத்தாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இத்தாலியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Repubblica Italiana
இத்தாலியக் குடியரசு
இத்தாலி கொடி இத்தாலி சின்னம்
நாட்டுப்பண்
Il Canto degli Italiani
Location of இத்தாலி
தலைநகரம் ரோம்
41°54′N 12°29′E / 41.900°N 12.483°E / 41.900; 12.483
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) இத்தாலிய மொழி
மக்கள் இத்தாலியன்
அரசு நாடாளுமன்றக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் சில்வியோ பெர்லுஸ்கோனி
 -  தலைமை அமைச்சர் ரொமானோ புரொடி
இத்தாலியக் கூட்டு
 -  இத்தாலியக் கூட்டு மார்ச் 17 1861 
 -  குடியரசு ஜூன் 2 1946 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு மார்ச் 25 1957
பரப்பளவு
 -  மொத்தம் 3,01,318 கிமீ² (71வது)
1,16,346.5 சது. மை 
 -  நீர் (%) 2.4
மக்கள்தொகை
 -  2006 மதிப்பீடு 59,131,287 [1] (23வது)
 -  அக்டோபர் 2001 குடிமதிப்பு 57,110,144 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $1.956 திரிலியன் [1] (8வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $31,200 [2] (20வது)
மொ.தே.உ(பொதுவாக) 2006 மதிப்பீடு
 -  மொத்தம்l $1.885 திரிலியன் [3] (7வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $33,680 [4] (21வது)
ஜினி சுட்டெண்? (2000) 36 (மத்திமம்
ம.வ.சு (2004) 0.940 (உயர்) (17வது)
நாணயம் யூரோ (€)1 (EUR)
நேர வலயம் மஐநே (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) மஐகோநே (ஒ.ச.நே.+2)
இணைய குறி .it2
தொலைபேசி +39
2 2002ற்கு முன்னர்: இத்தாலிய லீரா.
3 .euவும் பாவனையில் உள்ளது.

இத்தாலியக் குடியரசு அல்லது இத்தாலி (இத்தாலிய மொழி: Repubblica Italiana அல்லது Italia - இட்டாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்பப் பகுதியையும், மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும், இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜி8, ஜி20 ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் முதன்மையான நாடுகளில் இதுவும் ஒன்று. இத்தாலியின் தலைநகரான உரோம் நகரம் மேற்கத்திய கலச்சாராத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது.

புவியியல்[தொகு]

இத்தாலி தெற்கு ஐரோப்பாவில் உள்ளது.

மொழிகள்[தொகு]

இத்தாலிய மொழியே இத்தாலியின் ஆட்சி மொழியாகும். ஐந்தரை கோடி மக்கள் இம்மொழியை தாய்மொழியாகப் பேசுவதாக அறியப்படுகிறது. இருப்பினும் உலகளவில் 15 கோடி மக்கள் இம்மொழியை பேசுவதாக கணிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல வட்டார வழக்குகள் உள்ளன. சிறுபான்மையினரின் மொழிகளும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆட்சிமொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, செருமன் மொழிகள் சில வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இத்தாலிய மொழியுடன் சிறுபான்மையினரின் மொழிகளிலும் கல்வி பயில வாய்ப்பு உள்ளது.

சமயம்[தொகு]

கிறித்தவமே பிரதான சமயமாகும். பிற சமயத்தினர் குறைவான விகிதத்திலேயே வாழ்கின்றனர். கத்தோலிக்க கிறித்தவமே பலரால் கடைபிடிக்கப்படுகிறது.

விளையாட்டு[தொகு]

கால்பந்தாட்டமே பிரதான விளையாட்டாகும். உலகக் கால்பந்தாட்ட கோப்பையிலும் இத்தாலி கலந்துகொண்டு கோப்பைகளை வென்றுள்ளது. கைப்பந்தும், கூடைப்பந்தும் முக்கியமான விளையாட்டுகளாகும்.

இத்தாலியின் சிறப்புகள்[தொகு]

வால்கமோனிகாப் பள்ளத்தாக்கு
பாறை ஓவியக் கீறல்கள் - கி.மு.8000(Neolithic)

இத்தாலியில் கி.மு.8000(Neolithic) ஆண்டு காலத்திலேயே, காமுனி(Camunni) நாகரீகம் இருந்துள்ளது. அதற்கானச் சான்று, இத்தாலியின் லோம்பார்டி மண்டலப் பகுதியிலுள்ள வால்கமோனிகா(Valcamonica)பள்ளத்தாக்குப் பகுதியின், பாறை ஓவியக் கீறல்களிலுள்ளன.[2].

இத்தாலி, ஐரோப்பியப் பண்பாடுகள் பலவற்றின் உறைவிடமாக விளங்கியது. மேற்குலக பண்பாட்டின் தலைநகராக ரோம் நகரம், பல நூற்றாண்டுகளாக இருந்தது. பரோக் என்றழைக்கப்படும் மேற்குலக கலாச்சாரம், 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோமிலேயே ஆரம்பமானது. அத்துடன் கத்தோலிக்க திருச்சபையும் இங்கேயே இருக்கிறது. 19ம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இருந்து 20ம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரையில், இத்தாலி காலனித்துவப் பேரரசாக இருந்தது.

இன்று, இத்தாலி ஒரு மக்களாட்சிக் குடியரசாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரநிலை அளவீட்டில் உலகின் 8வது நாடாக இத்தாலி விளங்குகிறது[3]. இத்தாலி ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகிய அமைப்புகளின் ஆரம்ப உறுப்பு நாடாகும். ஜி8 அமைப்பிலுள்ள ஒரு உறுப்பு நாடாகும்.

இத்தாலியின் தோற்றம்[தொகு]

கி.பி.1000

தற்போதுள்ள இத்தாலியக் குடியரசு நாடு 1946 ஜூன் 2 இல் உருவானது. அதற்குமுன், இத்தாலிய பேரரசாக (Kingdom of Italy) 1861, மார்ச் 17 முதல் இருந்தது.

இத்தாலிய இராச்சியம் உருவாவதற்கான விதைக்கரு பல்வேறு வரலாற்று நிகழ்வுகளால் தோன்றியது. அவைகள் வருமாறு;-

  • 14-17ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட எலிக்கொள்ளை நோய்.(Plague)
  • 65 ஆண்டுகள் நடந்த இத்தாலியப் போர்கள் - (1494 - 1559)
  • அப்போர்களுக்குப்பின், உருவான அரசுகளின் அமைதியான ஒருங்கிணைந்த ஆட்சிமுறைகள்.
  • 154 ஆண்டுகள் நடைப்பெற்ற எசுப்பானிய (Habsburg spain) ஆட்சி முறை - (1559 - 1713)
  • 83ஆண்டுகள் நடைப்பெற்ற ஆஃசுதிரிய (Habsburg Austria) ஆட்சி முறை - (1713 - 1796)
  • 18ஆண்டுகள் நடைப்பெற்ற பிரென்'சு குடியரசின் ஆட்சி முறை - (1796-1814)
  • 1814ல் நடைப்பெற்ற வியன்னா பேராயத்தின் தீர்மானங்களும், செயலாக்கங்களும் ஆகும்.

இத்தாலியின் மண்டலங்கள்[தொகு]

இத்தாலிய மண்டலங்கள்- 20
இத்தாலியில் பேசப்படும் கிளைமொழிகள்

இத்தாலிய நாடானது, 20 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து மண்டலங்களுக்கு, சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவை, சாதாரண அதிகாரங்களுள்ள மண்டலங்கள் ஆகும். அம்மண்டலங்கள் ஆட்சி நிர்வாகத்திற்காக, இரண்டு அல்லது அதற்கு மேலும் ஒரு தடவை பிரிக்கப்பட்டுள்ளன. அ'சுடாப் பள்ளத்தாக்கு(Valle d'Aosta) என்ற சிறப்பு மண்டலம், அங்ஙனம் பிரிக்கப்படாத மண்டலமாகும்.

மண்டலங்கள் தலைநகரம் பரப்பளவு (km²) மக்கள் தொகை
1)அப்ருசோ(Abruzzo) L'Aquila &&&&&&&&&&010794.&&&&&010,794 &&&&&&&&01324000.&&&&&013,24,000
2)Aosta பள்ளத்தாக்கு (சிறப்பு மண்டலம்-1) Aosta &&&&&&&&&&&03263.&&&&&03,263 &&&&&&&&&0126000.&&&&&01,26,000
3)அபுலியா(Apulia) பாரி(Bari) &&&&&&&&&&019362.&&&&&019,362 &&&&&&&&04076000.&&&&&040,76,000
4)பசிளிகாதா(Basilicata) (Potenza) &&&&&&&&&&&09992.&&&&&09,992 &&&&&&&&&0591000.&&&&&05,91,000
5)கலபிரியா(Calabria) Catanzaro &&&&&&&&&&015080.&&&&&015,080 &&&&&&&&02007000.&&&&&020,07,000
6)Campania Naples &&&&&&&&&&013595.&&&&&013,595 &&&&&&&&05811000.&&&&&058,11,000
7)Emilia-Romagna Bologna &&&&&&&&&&022124.&&&&&022,124 &&&&&&&&04276000.&&&&&042,76,000
8) Friuli-Venezia Giulia (சிறப்பு மண்டலம்-2) Trieste &&&&&&&&&&&07855.&&&&&07,855 &&&&&&&&01222000.&&&&&012,22,000
9) Lazio ரோம் &&&&&&&&&&017207.&&&&&017,207 &&&&&&&&05561000.&&&&&055,61,000
10)Liguria Genoa &&&&&&&&&&&05421.&&&&&05,421 &&&&&&&&01610000.&&&&&016,10,000
11) லோம்பார்டி(Lombardy) மிலன்(Milan) &&&&&&&&&&023861.&&&&&023,861 &&&&&&&&09642000.&&&&&096,42,000
12)Marche Ancona &&&&&&&&&&&09694.&&&&&09,694 &&&&&&&&01553000.&&&&&015,53,000
13)Molise Campobasso &&&&&&&&&&&04438.&&&&&04,438 &&&&&&&&&0320000.&&&&&03,20,000
14) பியத்மாந்து (Piedmont) துரின் &&&&&&&&&&025399.&&&&&025,399 &&&&&&&&04401000.&&&&&044,01,000
15)சார்தீனியா(Sardinia) (சிறப்பு மண்டலம்-3) Cagliari &&&&&&&&&&024090.&&&&&024,090 &&&&&&&&01666000.&&&&&016,66,000
16)சிசிலி..........(Sicily) (சிறப்பு மண்டலம்-4) Palermo &&&&&&&&&&025708.&&&&&025,708 &&&&&&&&05030000.&&&&&050,30,000
17) Tuscany Florence &&&&&&&&&&022997.&&&&&022,997 &&&&&&&&03677000.&&&&&036,77,000
18)Trentino-Alto Adige (சிறப்பு மண்டலம்-5) Trento &&&&&&&&&&013607.&&&&&013,607 &&&&&&&&01007000.&&&&&010,07,000
19)Umbria Perugia &&&&&&&&&&&08456.&&&&&08,456 &&&&&&&&&0884000.&&&&&08,84,000
20)Veneto வெனி'சு &&&&&&&&&&018391.&&&&&018,391 &&&&&&&&04832000.&&&&&048,32,000

இத்தாலிய எழில்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Istat - Monthly demographic balance (January–December 2006)". Istituto Nazionale di Statistica.. பார்த்த நாள் 2006-07-05.
  2. ஆங்கில விக்கிபீடியா இணையப் பக்கம்
  3. Quality-of-life Survey, தி எக்கனாமிஸ்ட்


ஜி8
கனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா

"http://ta.wikipedia.org/w/index.php?title=இத்தாலி&oldid=1667087" இருந்து மீள்விக்கப்பட்டது