உரோமை நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Comune di Roma
ரோம் நகரம்
Skyline of Comune di Romaரோம் நகரம்
Flag of Comune di Romaரோம் நகரம்
Flag
Official seal of Comune di Romaரோம் நகரம்
Seal
Motto: Senatus Populusque Romanus (SPQR)  (இலத்தீன்)
ரோம் அமைந்திடம்
ரோம் அமைந்திடம்
ஆள்கூறுகள்: 41°54′N 12°30′E / 41.900°N 12.500°E / 41.900; 12.500
மண்டலம் லாசியோ
மாகாணம் ரோம் (RM)
தோற்றம் ஏப்ரல் 21, கிமு 753
அரசாங்க
 • மாநகராட்சித் தலைவர் ஜியொவானி அலெமான்னோ
பரப்பு
 • City வார்ப்புரு:Infobox settlement/metric/mag
 • Urban 5
Elevation +2
மக்கள் (டிசம்பர் 2006)[1]
 • நகர் 2
 • அடர்த்தி 2.5
 • நகர்ப்புறம் 4
 • பெருநகர் பகுதி 5
நேர வலயம் CET (UTC+1)
 • Summer (DST) CEST (UTC+2)
அஞ்சல் குறியீடுகள் 00121 - 00199
தொலைபேசி குறியீடு 06
புனிதர்கள் புனித பேதுரு, புனித பவுல்
Website www.comune.roma.it

ரோம் (Rome, இத்தாலியம்: Roma ஒலிப்பு [ˈroːma]  ( listen); இலத்தீன்: Rōma) இத்தாலியின் தலைநகரம் ஆகும். உலகில் அழகு என்ற சொல்லுக்கு ரோம் நகரையும் கூறலாம். ஏனென்றால் ரோமர்கள் அப்படி அந்நகரை வடித்திருப்பர். 'எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே', 'இறப்பதற்கு முன் ரோமை பார்க்க வேண்டும்' என்னும் வாக்கியங்கள் அதன் சிறப்புக்கு உதாரணம் ஆகும். ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோம் கலாச்சாரமே வழிகாட்டி ஆகும். இதுவே இத்தாலியின் மக்கள்தொகை மிக்க நகரமும் ஆகும். இந்நகரில் சுமார் 2.8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இந்நகரில் பேசப்பட்டு வந்த இலத்தின் மொழியே திரிந்து ஐரோப்பியக் கண்டம் முழுவதும் வெவ்வேறு மொழியாக மாறியுள்ளது. ஆனால் தற்போது ரோமர்கள் பேசுவது இத்தாலிய மொழியாகும். இந்நகரம் இத்தாலிய மூவலஞ்சூழ் தீவகத்தில் நடு மேற்குப் பகுதியில் அனியென் ஆறானது டைபர் ஆற்றில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக் கணிப்பின் படி ரோம் மாநகரம் மட்டுமே சுமார் 97 யூரோ (€ 97) பொருள் ஈட்டம் பெற்றது, மேலும் இது இத்தாலிய நாட்டு உற்பத்தியில் 6.7% ஆகும்.

வரலாறு[தொகு]

ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ட்ராய் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது அங்கிருந்து ஓடிவந்த மன்னன், லிதியம் என்கிற ஆற்றின் கரையிலிருந்த வேறொரு மன்னிடம் தஞ்சமடைந்தான். பிறகு, அம்மன்னனின் மகளையே மணம் செய்து கொண்டான். அந்த வம்சாவழியில் வந்த ஒரு பெண் ரியா சில்வியா, அவள் செவ்வாய் கிரகத்தால் கருவுற்று இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றாள். ஆனால், அந்த நேரத்தில் அவளின் மாமன் அந்த நகரத்தை கைப்பற்றியதால், தன் குழந்தைகளை காக்க ஒரு கூடையில் அவர்களை வைத்து டைபர் ஆற்றில் வி்ட்டுவிட்டாள். ஆற்றில் சென்ற குழந்தைகளை ஓநாய் ஒன்று இழுத்து வந்து, தன் பாலை சொறிந்து அவர்களை காத்தது. ஓநாயிடம் இருந்த குழந்தைகளை, அவ்வழியாக சென்ற மாடு மேய்ப்பவன் காப்பாற்றி வளர்த்து வந்தான். அவர்களே ரோமுலசு மற்றும் ரேமசு. இதன் அடையாளமாக ஓநாய் பாலூட்டும் இரட்டையர் சிலை ரோமானியா முழுவதும் இடம் பெற்றிருக்கும்.

ஓநாய் பாலூட்டும் ரேமஸ்,ரோமுலஸ்

இரட்டையர்களாகிய ரோமுலஸ், ரேமஸ் ஆகியோர் இணைந்து கி.மு. 753ல் ரோம் நகரத்தை நிறுவியதாக ஒரு தொல்மரபு கூறுகின்றது. அகழ்வாராய்ச்சியின் படியும் சுமார் கி.மு 8 ஆம் நூற்றாண்டு வாக்கில் இருந்து தொடர்ந்து மக்கள் இன்று ரோம் நகரம் உள்ள பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.

உரோமைக் குடியரசு உரோம நாகரீகம் குடியரசு அரசமைப்பாக இருந்த கால கட்டத்தைக் குறிக்கிறது. முடியரசாக இருந்த உரோம நகர் கிமு 508 இல் குடியரசானது. ஒவ்வொரு ஆண்டும் கோன்சல்கள் எனப்பட்டும் இரு அதிகாரிகள் செனேட் அவையினால் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசை நிருவகித்தனர். காலப்போக்கில் ஒரு விரிந்த அரசியலமைப்புச் சட்டமும் உருவானது. அதில் அரசின் ஒவ்வொரு பிரிவின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு அங்கமும் முழு அதிகாரத்தைக் கையிலெடுக்காவண்ணம் அதிகாரத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தேசிய நெருக்கடி காலங்களைத் தவிர அதிகாரிகளின் பதவிக் காலம் ஓராண்டாக குறுக்கப்பட்டிருந்தது. எந்த வொரு தனி மனிதனும் குடியரசு மீது சர்வாதிகாரம் செலுத்த முடியாதவாறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.

ஆனால் உரோமக் குடியரசு படையெடுப்புகளாலும் பிற நாட்டுக் கூட்டணிகளாலும் அளவில் பெருகியதால், குடியரசு நிருவாக முறை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போனது. அதிகாரம் ஒரு சில செல்வாக்கு வாய்ந்த செனேட்டர்கள் கையில் தங்கியதால், அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. உள்நாட்டுப் போர் மூழ்வது வழக்கமானது. கிமு ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாக பல உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன. அவற்றின் இறுதியில் வெற்றி பெற்ற ஆக்ட்டேவியன் அகஸ்ட்டஸ் என்ற பெயரில் பேரரசராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். குடியரசு கலைக்கப்பட்டு உரோமைப் பேரரசு உருவானது.

விக்டர் இம்மானுவேல் நினைவகம்[தொகு]

தனித்தனியாக இருந்த இத்தாலியை ஒன்றினைத்து ஆட்சி செய்தவர் விக்டர் இம்மானுவேல். ஆறு முதல் ஒன்பது வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். அவரை கவுரவிக்க கட்டப்பட்ட கட்டிடமே விக்டர் இம்மானுவேல் நினைவகம். இதை 1885-ல் ஆரம்பித்து 1911 ல் தான் கட்டி முடித்திருக்கிறார்கள். இது முழுவதும் சலவைக் கற்களால் கட்டப்பட்டது ஆகும். இக்கட்டிடத்தின் முன் குதிரை மீது அமர்ந்து இருக்கும் இம்மானுவேலின் சிலை கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ட்ரிவி ஃபவுண்டைன்[தொகு]

ரோம் நகரின் மிகப்பெரிய ஃபவுண்டைன்,ட்ரிவி ஃபவுண்டைன் ஆகும்.ட்ரிவி என்றால் 'மூன்று சாலை கூடுமிடம்' என்று பொருள்.இந்த ஃபவுண்டைனில் மூன்று சாலைகள் கூடுகின்றன அதனால் இப் பெயர் ஏற்பட்டது.இந் நீரூற்றுக்கு சலோன் என்னும் நீரூற்றிலிருந்து நீர் வருகிறது. இதை 1732-ல் ஆரம்பித்து 1762 ல் தான் கட்டி முடித்திருக்கிறார்கள்.இதில் சமுத்திரக் கடவுளான ஓசியானஸின் சிலை உள்ளது.அவரின் இரு பக்கமும் இரு சிலை உள்ளது.ஒன்று செல்வம் அளிக்கும் கடவுளின் சிலை மற்றொன்று நோயை குணப்படுத்தும் கடவுளின் சிலை.

கொலோசியம்[தொகு]

ரோமானியர்கள் சண்டையை ஒரு திருவிழா போல் கொண்டாடுவர்.அதற்காக கட்டப்பட்டதே கொலோசியம்.இங்கு சண்டை இடும் வீரர்களை கிளாடியேட்டர் என்றே அழைப்பர். கிளாடி என்றால்'கத்தி' என்று பொருள்.கி.பி.முதலாம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது.இதன் உயரம் 150 அடியாகும்,மொத்தம் நான்கு கேலரியை உள்ளடுக்கியது ஆகும்,ஒரே சமயத்தில் இங்கு 8000 பேர் அமர்ந்து வீரர்களின் சண்டைகளை காணலாம்.

தி பாத்ஸ் ஆப் கரகலா[தொகு]

கரகலா என்ற மன்னன் கட்டிய ஒரு பொது குளியல் தொட்டியே தி பாத்ஸ் ஆப் கரகலா ஆகும்

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. http://demo.istat.it/bilmens2006/index.html- ISTAT demographics

வேங்கடம் எழுதிய அடேங்கப்பா ஐரோப்பா-விகடன் பிரசுரம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=உரோமை_நகரம்&oldid=1506780" இருந்து மீள்விக்கப்பட்டது