கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
புனித பவுல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| புனித பவுல் |

புனித பவுல் தமாஸ்கு நகரின் அனனியா வழியாய் பார்வையடைதல்
1631 ஆண்டு பியெர்த்ரோ கொர்டோனாவின் ஓவியம். |
| வேற்று இனத்தவரின் திருத்தூதர் |
| பிறப்பு |
கிபி 9
சிசிலியாவின் தர்சு |
| இறப்பு |
கிபி 67
உரோம் |
| ஏற்கும் சபை/சமயம் |
எல்லா கிறித்தவ பிறிவுகளும் |
| முக்கிய திருத்தலங்கள் |
மதிலுக்கு வெளியான பவுல் பசிலிக்கா உரோம் |
| திருவிழா |
சனவரி 25, ஜூன் 29, நவம்பர் 18 |
புனித பவுல் (சின்னப்பர்) கிறிஸ்தவ புனிதராவார். இவரது இயற் பெயர் சவுல் என்பதாகும். இவர் கி.பி. 9 தொடக்கம் 67 வரை வாழ்ந்தார். சிசிலியாவின் தர்சு பட்டினத்தைச் சேர்ந்த உரோம குடிமகனாவார். இவர் யூத மதத்தை பின்பற்றி வந்தார். இவர் ஆரம்பத்தில் அக்காலத்தில் இயங்கிய கிறிஸ்தவரைத் தேடி அழிக்கும் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். தமஸ்குவில் கிறிஸ்தவர் பலர் இருப்பதாக அறிந்து அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு கொண்டுவருவதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு தமஸ்கு செல்லும் வழியில் ஒளி வடிவில் இயேசு அவர் முன் தோன்றினார்.
பின்னர் பவுல் இயேசுவை விசுவாசித்து மனம் மாறினார். இயேசுவை ஏற்ற பின்னர் மறை பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பவுல் ஆரம்ப கிறிஸ்தவ மறை பரப்புனர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். கிறிஸ்த்து எல்லோருக்கும் பொதுவானவர் யூதருக்கு மட்டும் உரியவரல்ல என்ற கருத்தை வலியுறுத்தினார். எனவே இவர் பிற இனத்தவரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார்.
மன மாற்றத்துக்கு முன் [தொகு]
புனித பவுல் தன்னைப் பற்றி விவிலியத்தில் எழுதியுள்ள படி, அவர் சிசிலியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு உரோம குடிமகனாவார். அவரது குடும்பம் மிகவும் செல்வந்தக் குடும்பமாகும். இஸ்ரவேலின் பெஞ்சமின் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பரிசேயராவார்.[1]. இளமையில் யூத மத சட்டங்களை கற்று தேர்ந்தார் [2].
அப்போது கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய காலமாகும். பல கிறிஸ்தவர் தமது நம்பிக்கை காரணமாகக் கொலை செய்யப்பட்டனர். பவுல் கிறிஸ்தவரை அழிக்க திடங்கொண்டு ஆட்சியாளரிடம் அதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு கிறிஸ்தவரைத் துன்புறுத்தினார் [3]. கிறிஸ்தவர் இவரது பெயரைக் கேட்டாலே அஞ்சினார்கள். இவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது தமஸ்குவில் கிறிஸ்தவர் இருப்பதாக கேள்விப்பட்டார். அங்கிருக்கும் கிறிஸ்தவரை கைது செய்து எருசலேம் நகருக்கு அழைத்து வரும்படி தமஸ்குவிற்கு புறப்பட்டார்.
மனமாற்றம் [தொகு]
தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவரைச் சுற்றிப் பிரகாசித்தது. சவுல் தரையிலே விழுந்தார். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே பேசுகிற ஒலியைக் கேட்டார். அதற்கு சவுல்: ஆண்டவரே, நீர் யார், என்றார். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். சவுல் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றார். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவரோடு பிரயாணம் செய்த மனிதர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது பார்வையற்று இருந்தார்.கூட இருந்தவர்கள் சவுலை கைலாகுகொடுத்து, தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். சவுல் மூன்று நாள் பார்வை இல்லாதவராய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தார். பின்பு கர்த்தர் அன்னியா என்பவரை சவுலிடம் அனுப்பினார். அப்பொழுது அன்னியா போய், சவுல் இருந்த வீட்டுக்குள் பிரவேசித்து, அவர்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். பின்பு அவன் உணவுண்டு பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீடருடனே சிலநாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.[4]
மறைப்பரப்பு [தொகு]
பவுலின் வாழ்வில் அகவை 45-57 வரையான காலப்பகுதி மிகவும் முக்கியமானதாகும். இக்காலப்பகுதியில் மூன்று மறைப்பரப்பு பயணங்களை மேற்கொண்டார். இவையனத்தும் அந்தியோக்கியாவில் ஆரம்பித்து எருசலேம் நகரில் முடிவடந்தன.
கடைசி நாட்கள் [தொகு]
பவுல் எருசலேமில் இருந்தபோது, யூதரல்லாதோரை தேவலயத்துக்குள் கூட்டிவந்ததாக பொய்யுரைத்து யூதர்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவரைத் தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டு போனர்கள். அவர்கள் அவரைக் கொலை செய்ய எத்தனித்தனர். எருசலேம் முழுவதும் கலக்கமாயிருக்கிறது என்று போர்ச் சேவகரின் சேனாபதிக்குச் செய்திவந்தது. உடனே அவன் போர்ச் சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடிவந்தான். சேனாபதியையும் போர்ச்சேவகரையும் மக்கள் கூட்டம் கண்டபோது பவுலை அடிக்கிறதை நிறுத்தினார்கள். சேனாபதி அருகேவந்து பவுலைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான். அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள் சந்தடியினாலே உண்மையை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று, இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் பவுலைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது.
கொலைச் சதி [தொகு]
அவர்கள் பவுலைக்; கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், பவுல் சேனாபதியிடம் தான் மக்களுடன் பேசும்படி அனுமதியை பெற்று கோட்டை படிகள் மேலிருந்தவாறு மக்களுக்கு இயேசுவைப் போதித்தார். இதனால் மேலும் கோபமடைந்த கூட்டம் மேலும் உக்கிரமாய் பவுலை கொலை செய்யும்படி கூக்குரலிட்டனர். பின்னர் நடந்த விசாரனைகளில் பவுலை குற்றப்படுத்த முடியாமல் போகவே, யூதர் விசாரணையின் போது கொலை செய்யச் சதி செய்தனர். இதை அறிந்த சேனாதிபதி பவுலை மிகுந்த காவலுக்கு மத்தியில் செசரியா பட்டணத்திற்குத் தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்தில் அனுப்பினான்.
சிறைவாசம் [தொகு]
செசரியா பட்டணத்தில் நடந்த விசாரனகளிலும் பவுல் வெற்றிகொண்டார். எனினும் அவர் விடுதலைக்காகக் கொடுக்க வேண்டிய பணத்தைச் செலுத்தாத காரணத்தினால் தேசாதிபதியாகிய பேலிக்ஸ் பவுலை இரண்டு வருடம் சிறையிலிட்டார். இதற்குள் புதிய தேசாதிபதியாக பொர்க்கியுபெஸ்து என்பவன் வந்து யூதரை சந்தோசப்படுத்தும் நோக்கில் பவுலின் சிறைக் காலத்தை நீடித்தான்.
மீள் விசாரணை [தொகு]
புதிய தேசாதிபதியாகிய பேலிக்சை அனுகிய யூதர் வழியில் பவுலை கொலைச் செய்யும் உள்நோக்கத்துடன் விசாரணையின் பொருட்டு பவுலை எருசலேமுக்கு அனுப்பும் படி கேட்டனர். ஆனால் பவுல் தேசாதிபதியாகிய பேலிக்சிடம் உரோமில் அரசன் முன்பாக தனது விசாரணை நடத்தும் படி உத்தரவைப் பெற்று எருசலேம் செல்வதைத் தவிர்த்தார். செசரியா பட்டணத்திலிருந்து உரோம் நகர் வரை பவுலை ஒரு கப்பலில் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கப்பல் வழியில் புயலை எதிர்கொண்டு பல நாட்களாகக் கடலிலிருந்தது. பின்பு உரோமை வந்தடைந்த பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடம் முழுவதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தார். தேசாதிபதியாகிய பேலிக்ஸ் பவுல் மீது பற்று கொண்டவராகக் காணப்பட்டமையாலும், உரோம் நகரில் யூத மதத்தினர் பெரும்பான்மையாக இல்லாத காரணத்தினாலும் பவுல் மீதான வழக்கை யூதர் கைவிட்டனர்.
பவுலின் மரணம் பற்றிய தகவல் விவிலியத்தில் காணப்படவில்லை. எனினும் அவர் உரோமில் வேத சாட்சியாக மரித்தார் என்பது மரபு.
உசாத்துணை [தொகு]
குறிப்புகள் [தொகு]
- ↑ பணிகள் 21:39, 22:3 பிலிப்பியர் 3:5-6
- ↑ பணிகள் 22:3
- ↑ பணிகள்7:58,9:1-19,26:9-23
- ↑ பணிகள் 9:1-22
|
கத்தோலிக்க புனிதர்கள் அகர வரிசை (வழிபாட்டு ஆண்டு விழா முறைப்படி) |
|
அக்கிலேயு, நெரேயு · அக்குவினோ நகர் தோமா · அகஸ்டின் ஜாவோ ரோங்கு · அகுஸ்தீன் · அகுஸ்தீன் (கான்றர்பரி நகர்) · அங்கேரி எலிசபெத்து · அங்கேரி ஸ்தேவான் · அசிசி நகர் பிரான்சிஸ் · அடால்பெர்ட் · அத்தனாசியு · அந்தியோக்கு நகர் இஞ்ஞாசி · அந்திரேயா · அந்தோணியார் (பதுவா நகர்) · அந்தோணி மரிய கிளாரெட் · அந்தோனி மரிய செக்கரியா · அப்போலினாரிஸ் · அம்புரோஸ் · அரசியான தூய கன்னி மரியா · அருளானந்தர் (ஜான் தெ பிரிட்டோ) · அல்போன்ஸ் மரிய லிகோரி · அல்போன்சா முட்டாத்துப்பாடாத் · அலக்கோக்கு மார்கரீத் மரியா · அலெக்சாந்திரியா நகர் கேத்தரின் · அலெக்சாந்திரியா நகர சிரில் · அலோசியுஸ் கொன்சாகா · அவிலா நகர் இயேசுவின் தெரேசா · அன்னா, சுவக்கீம் (தூய மரியாவின் பெற்றோர்) · அன்னை தெரேசா · ஆகத்தா · ஆக்னெஸ் · ஆஞ்சலா மெரிசி · ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் · ஆண்டவரின் தோற்றமாற்றம் · அன்னை (கன்னி மரியாவின் பிறப்பு) · ஆல்பர்ட் (பெரிய) · ஆன்சலம் · ஆன்ஸ்காரியு · ஆன்ரூ கிம் தே கோன் · ஆன்ரு டுங் லாக் · இசிதோர் · இஞ்ஞாசி (லொயோலா) · இப்போலித்து; போன்சியானு · இயேசுவின் (அவிலா நகர்) தெரேசா · இயேசுவின் திருப்பெயர் · இரண்டாம் சிக்ஸ்து · இரபேல்; கபிரியேல்; மிக்கேல் ·இரனேயு · இரேய்முந்து பெனாப்போர்த்து · இலாரியார் · இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு · இறை யோவான் · இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் · ஈசாக்கு ஜோகு; ஜான் பிரபூபு · உரோமைத் திருச்சபையின் முதல் மறைச்சாட்சியர் · எட்விஜ் · எபிரேம் · எமிலியன் எரோணிமுசு · எருசலேம் நகர் சிரில் · எரோணிமுசு · எரோணிமுசு எமிலியன் · எலிசபெத்து (அங்கேரி) · எலிசபெத்து (போர்த்துகல் · எலியாஸ் சவாரா குரியாக்கோஸ் · என்றி · ஏழாம் கிரகோரி · ஐந்தாம் பயஸ் · கசிமீர் · கபிரியேல், மிக்கேல், இரபேல் · கப்பெஸ்தரானோ நகர் யோவான் · கமில்லஸ் தெ லெல்லிஸ் · கயத்தான் · கலசான்ஸ் நகர் யோசேப்பு · கலிஸ்து (முதலாம்) · கனீசியு பீட்டர் · காசியா சபை ரீத்தா · கார்மேல் அன்னை · காவல் தூதர்கள் (தூய) · அகுஸ்தீன் (கான்றர்பரி நகர்) · கான்டி நகர் யோவான் · கிம் தே கோன், ஆன்ரூ · கிரகோரியார்; நசியான்சன்; பெரிய பசிலியார் · கிரகோரி (பெரிய) · கிரகோரி (ஏழாம்) · கிளமெண்ட் (முதலாம்) · கிளாரா ·கிளாவர் பீட்டர் · யோவான் கிறிசோஸ்தோம் · கிறிசோலோகு பீட்டர் · கிறிஸ்டோபர் மெகாலன் · கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு · குரியாக்கோஸ் எலியாஸ் சவாரா · குழந்தை இயேசுவின் தெரேசா · கேத்தரின் (அலெக்சாந்திரியா நகர்) · கேத்தரின் (சியென்னா நகர்) · கொர்னேலியு; சிப்பிரியான் · மரியா கொரெற்றி · கொலும்பன் · கொன்சாகா அலோசியுஸ் · கொன்சாலோ கார்சியா · கோஸ்மாஸ்; தமியான் · சலேசியார் பிரான்சிஸ் · சவேரியார் பிரான்சிஸ் · சனுவாரியுசு · சாந்தால் நகர் ஜான் பிரான்சிஸ்கா · சார்லஸ் பொரோமியோ · சார்லஸ் லுவாங்கா · சார்பெல் மாக்லுப் · சானல் பியர் · சிக்மரிங்கன் நகர் பிதேலிஸ் · சிக்ஸ்து (இரண்டாம்) · சிப்பிரியான் · சியென்னா நகர் கேத்தரின் · சியன்னா நகர் பெர்னார்தீன் · சிராமெல் மரிய தெரேசா · அலெக்சாந்திரியா நகர சிரில் · சிரில் (எருசலேம் நகர்) · சிரில்; மெத்தோடியு · சில்வெஸ்தர் (முதலாம்) · சிலுவையின் பவுல் · சிலுவையின் யோவான் · சீமோன்; யூதா · சுவக்கீம்; அன்னா · செசிலியா · செபஸ்தியார் · செபமாலை அன்னை · சோங் காசாங் பவுல் · ஜஸ்டின் · ஜார்ஜ் · ஜாவோ ரோங்கு அகஸ்டின் · ஜான் தெ பிரிட்டோ · ஜான் பாப்டிஸ்ட் (லசால் நகர்) · ஜான் பிரபூபு; ஈசாக்கு ஜோகு · ஜான் பிரான்சிஸ்கா (சாந்தால் நகர்) · ஜான் பிசர்; தாமஸ் மூர் · ஜான் போஸ்கோ · ஜான் மரிய வியான்னி · ஜான் யூட்ஸ் · ஜூலியன் எய்மார்ட் பீட்டர் · ஜெர்த்ரூது · யோசப் வாசு · ஜோஸ்பீன் பக்கீத்தா · ஸ்காட்லாந்து மார்கரீத் · ஸ்கொலாஸ்திக்கா · ஸ்தேவான் · டுங் லாக் ஆன்ரூ · தமசுஸ் (முதலாம்) · தமசேன் யோவான் · தமியான்; கோஸ்மாஸ் · தமியான் பீட்டர் · தனிஸ்லாஸ் · தாமஸ் பெக்கட் · தாமஸ் மூர்; ஜான் பிசர் · திமொத்தேயு; தீத்து · திருச்சிலுவையின் தெரேசா பெனடிக்டா · திருச்சிலுவையின் மகிமை · திருமுழுக்கு யோவானின் பிறப்பு · திருமுழுக்கு யோவானின் பாடுகள் · தியோனிசியு · தீத்து; திமொத்தேயு · துரீபியு மாங்ரோவேகோ · தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் · தூய கன்னி மரியா அரசி · தூய கன்னி மரியா இறைவனின் தாய் · தூய கன்னி மரி ஊழியர் சபை நிறுவிய புனிதர் எழுவர் · தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் · தூய கன்னி மரியாவின் கணவர் யோசேப்பு · தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் · தூய கன்னி மரி பிறப்பு (ஆரோக்கிய அன்னை) · தூய கன்னி மரியாவின் பெற்றோர் சுவக்கீம், அன்னா · தூய கன்னி மரி பேராலய நேர்ந்தளிப்பு (பனிமய அன்னை) · தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு · தூய கார்மேல் அன்னை · தூய காவல் தூதர்கள் · தூய செபமாலை அன்னை · தூய பாத்திமா அன்னை · தூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) · தூய லூர்து அன்னை · தூர் நகர் மார்ட்டின் · தெ பால் வின்சென்ட் · தெ பிரிட்டோ ஜான் (அருளானந்தர்) · தெ போரஸ் மார்ட்டின் · தெ லெல்லிஸ் கமில்லஸ் · தெரசா (அன்னை) · தெரேசா (இயேசுவின்) (அவிலா நகர்) · தெரேசா (குழந்தை இயேசுவின்) · தெரேசா பெனடிக்டா (திருச்சிலுவையின்) · தொழிலாளர் யோசேப்பு · தோமா · தோமா (அக்குவீனோ நகர்) · தோமினிக் · தோமினிக் சாவியோ · நசியான்சன் கிரகோரியார்; பெரிய பசிலியார் · நார்பெர்ட் · நிக்கோலாஸ் · நெரேயு; அக்கிலேயு · நேரி பிலிப்பு · நோலா பவுலீனு · பக்கீத்தா ஜோஸ்பீன் · பங்கிராஸ் · பசிலியார் (பெரிய); நசியான்சன் கிரகோரியார் · பத்தாம் பயஸ் · பதுவா நகர் அந்தோணியார் · பபியான் · பயஸ் (ஐந்தாம்) · பயஸ் (பத்தாம்) · பர்த்தலமேயு · பர்னபா · பவுல் (சிலுவையின்) · பவுல் சோங் காசாங் · பவுல்; பேதுரு · பவுல், பேதுரு பேராலயங்களின் நேர்ந்தளிப்பு · பவுல் மனமாற்றம் · பவுல் மீகி · பவுலீனு நோலா · பவோலா பிரான்சிஸ் · பனிமய அன்னை (தூய கன்னி மரி பேராலய நேர்ந்தளிப்பு · பாசி நகர் மகதலா மரியா · பாத்திமா அன்னை (தூய) · பிசர் ஜான்; தாமஸ் மூர் · பிதேலிஸ் (சிக்மரிங்கன் நகர்) · பியர் சானல் · பிரான்சிஸ்கா (உரோமை நகர்) · பிரான்சிஸ் (அசிசி நகர்) · பிரான்சிஸ் சலேசியார் · பிரான்சிஸ் சவேரியார் · பிரான்சிஸ் பவோலா · பிரிசித்தா · பிரிந்திசி நகர் லாரன்ஸ் · பிலிப்பு நேரி · பிலிப்பு; யாக்கோபு · பிளாசியு · பீட்டர் கனீசியு · பீட்டர் கிறிசோலகு · பீட்டர் கிளாவர் · பீட்டர் ஜூலியன் எய்மார்ட் · பீட்டர் தமியான் · பீட்டர் மார்சலின் · பீடு (வணக்கத்துக்குரிய) · புரூனோ · புனிதர் அனைவர் · பெக்கட் தாமஸ் · பெர்நார்ட் · பெர்பெத்துவா; பெலிசித்தா · பெலிசித்தா; பெர்பெத்துவா · பெர்னார்தீன் (சியன்னா நகர்) · பெரர் வின்சென்ட் · பெரிய ஆல்பெர்ட் · பெரிய கிரகோரியார் · பெரிய லியோ · பெல்லார்மின் ராபர்ட் · பெனடிக்ட் · பெனடிக்டா தெரேசா (திருச்சிலுவையின்) · பெனாப்போர்த்து இரேய்முந்து · பேட்ரிக் · பேதுருவின் தலைமைப் பீடம் · பேதுரு; பவுல் · பொரோமியோ சார்லஸ் · பொலிக்கார்ப்பு · பொனவெந்தூர் · போஸ்கோ ஜான் · போன்சியானு; இப்போலித்து · போனிப்பாஸ் · மகதலா மரியா · மகதலா மரியா (பாசி நகர்) · மத்தியா · மத்தேயு · மரிய கிளாரெட் அந்தோணி · மரியா கொரெற்றி · மரிய கோல்பே மாக்சிமிலியன் · மரிய செக்கரியா · மரிய தெரேசா சிராமெல் · மரிய லிகோரி அல்போன்ஸ் · மரிய வியான்னி ஜான் · மரியா மகதலா · மரியா மகதலா (பாசி நகர்) · மரியாவின் திருப்பெயர் · மறைச்சாட்சியர் (உரோமைத் திருச்சபையின்) · மாக்சிமிலியன் மரிய கோல்பே · மாக்லுப் சார்பெல் · மாங்ரோவேகோ துரீபியு · மாசில்லாக் குழந்தைகள் · மார்கரீத் மரியா அலக்கோக்கு · மார்சலின் பீட்டர் · மார்ட்டின் தெ போரஸ் · மார்ட்டின் (தூர் நகர்) · மார்ட்டின் (முதலாம்) · மார்த்தா · மாற்கு · மான்போர்ட் நகர் லூயி மரிய கிரிஞ்ஞோ · மிக்கேல், கபிரியேல், ரபேல் (அதிதூதர்கள்) · மீகி பவுல் · முட்டாத்துபாடாத் அல்போன்சா · முதலாம் கலிஸ்து · முதலாம் சில்வெஸ்தர் · முதலாம் கிளமெண்ட் · முதலாம் தமசுஸ் · முதல் மறைச்சாட்சியர் (உரோமைத் திருச்சபையின்) · முதலாம் மார்ட்டின் · மெகாலன் கிறிஸ்டோபர் · மெத்தோடியு; சிரில் · மெரிசி ஆஞ்சலா · மோனிக்கா · யாக்கோபு · யாக்கோபு; பிலிப்பு · யுசேபியு (வெர்செல்லி நகர் · யூட்ஸ் ஜான் · யூதா; சீமோன் · யோசபாத்து · யோசேப்பு (கலசான்ஸ் நகர்) · யோசேப்பு (தூய கன்னி மரியாவின் கணவர்) · யோசேப்பு (தொழிலாளர்) · யோவான் · யோவான் (இறை) · யோவான் (கப்பெஸ்த்தரானோ நகர்) · யோவான் (கான்டி நகர்) · யோவான் கிறிசோஸ்தோம் · யோவான் (சிலுவையின்) · யோவான் தமசேன் · யோவான் (முதலாம்) · யோவான் லெயோனார்ட் · யோவானின் (திருமுழுக்கு) பிறப்பு · யோவானின் (திருமுழுக்கு) பாடுகள் · ரபேல், மிக்கேல், கபிரியேல் (அதிதூதர்கள்) · ராபர்ட் பெல்லார்மின் · ரீத்தா (காசியா சபை) · ருய்ஸ் லாரன்ஸ் · ரோசா (லீமா நகர்) · ரோமுவால்து · லசால் நகர் ஜான் பாப்டிஸ்ட் · லாரன்ஸ் · லாரன்ஸ் (பிரிந்திசி நகர்) · லாரன்ஸ் ருய்ஸ் · லீமா நகர் ரோசா · லுஸ்தானியா நகர் எலிசபெத்து · லுவாங்கா சார்லஸ் · லூக்கா · லூசியா · லூயி · லூயி மரிய கிரிஞ்ஞோ (மான்போர்ட் நகர் · லூர்து அன்னை (தூய) · லெயோ (பெரிய) · லெயோனார்ட் யோவான் · லொயோலா இஞ்ஞாசி · புனித வனத்து அந்தோனியார் · வணக்கத்துக்குரிய பீடு · யோசப் வாசு · வியாகுல அன்னை (தூய மரியாவின் துயரங்கள் · வியான்னி மரிய ஜான் · வின்சென்ட் · வின்சென்ட் தெ பால் · வின்சென்ட் பெரர் · வெர்செல்லி நகர் யுசேபியு · வென்செஸ்லாஸ் ·
|
|