லைனஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனித லீனஸ் (லீனுஸ்)
Saint Linus
இரண்டாம் திருத்தந்தை
Linus2.jpg
ஆட்சி துவக்கம் கிபி சுமார் 67
ஆட்சி முடிவு கிபி சுமார் 76
முன்னிருந்தவர் புனித பேதுரு
பின்வந்தவர் புனித அனகிலேத்துஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர் லீனஸ்
பிறப்பு தகவலில்லை
இறப்பு கிபி சுமார் 76

லீனஸ் (Linus) அல்லது லீனுஸ் அல்லது லைனஸ் என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இயேசுவால் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தப்பட்ட புனித பேதுருவே தம் வழித்தோன்றலாக லீனஸை நியமித்தார் என்பது மரபு[1]. இவர் கி.பி. சுமார் 67இலிருந்து 76 வரை திருச்சபையின் தலைவராகவும் உரோமை ஆயராகவும் இருந்தார்.

முதலாம் கிளமெண்ட் என்னும் திருத்தந்தை விட்டுச்சென்ற குறிப்பின்படி, லீனஸ் என்பவரே பேதுருவின் பின் திருத்தந்தை ஆனார்.

இவர் திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றதாகக் குறிப்பிடுகின்ற மிகப் பழமையான சான்று புனித இரனேயுஸ் என்பவர் ஆவார். அவர் கி.பி. 180 அளவில் பின்வருமாறு எழுதினார்:

இறைப்பேறு பெற்ற திருத்தூதர்கள் (பேதுருவும் பவுலும்) திருச்சபையை நிலைநாட்டி, கட்டியெழுப்பியபின், ஆயர் பணி என்னும் பொறுப்பினை லீனஸிடம் ஒப்படைத்தனர்.

3-4 நூற்றாண்டுகளில் வாழ்ந்த புனித ஜெரோம் என்பவரும்,

உரோமைத் திருச்சபைக்குப் பொறுப்பைப் புனித பேதுருவுக்குப்பின் லீனஸ் ஏற்றார்

என்று குறிப்பிடுகிறார்.

லீனஸ் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்று சில ஏடுகள் கூறுகின்றன.

ஆதாரங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லைனஸ்_(திருத்தந்தை)&oldid=1626566" இருந்து மீள்விக்கப்பட்டது