ஆறாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆறாம் போனிஃபாஸ் | |
![]() |
|
| ஆட்சி துவக்கம் | ஏப்ரல் 896 |
|---|---|
| ஆட்சி முடிவு | ஏப்ரல் 896 |
| முன்னிருந்தவர் | ஃபொர்மோசுஸ் |
| பின்வந்தவர் | ஆறாம் ஸ்தேவான் |
| பிற தகவல்கள் | |
| பிறப்புப் பெயர் | ??? |
| பிறப்பு ஆண்டும் இடமும் | ??? ரோம், இத்தாலி |
| இறப்பு ஆண்டும் இடமும் | ஏப்ரல் 896 ??? |
| போனிஃபாஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் | |
திருத்தந்தை ஆறாம் போனிஃபாஸ், ரோம் நாட்டினர் ஆவார். சுமார் ஏப்ரல் 896-ஆம் ஆண்டு, திருத்தந்தை ஃபொர்மோசுஸின் மரணத்திற்குப் பிறகு நிகழ்ந்த கலவரத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சிக்கு வருவதற்க்கு முன்பே இருமுறை குருவாகவும், துணை திருத்தொண்டராகவும் இருந்தபோது தன் பதவியை இழக்க நேர்ந்தது.
வெறும் 15 நாள் ஆட்சிக்குப்பின் கீல்வாதத்தால் இறந்ததாக நம்பப்படுகின்றது. ஆனால் வேறு சிலர் ஸ்பொலித்தோக்களின் (Spoleto) கட்டாயத்தினால், ஆறாம் ஸ்தேவானை திருத்தந்தையாக்க பதவி விலகினார் எனகின்றனர்.
898-ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் யோவானால் கூட்டப்பெற்ற சங்கத்தில் இவரது திருப்பீட தேர்தல் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
[தொகு] மேற்கோள்கள்
- இந்தக் கட்டுரையில் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் 11ம் பதிப்பில் இருந்து உரை எடுத்தாளப்பட்டுள்ளது. இது தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ளது.
- "ஆறாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
| முன்னர் ஃபொர்மோசுஸ் |
திருத்தந்தை 896 |
பின்னர் ஆறாம் ஸ்தேவான் |
